விடுதலை நீ நீயாக இரு- நூல் விமர்சனம்

“சிறகு முளைத்த ஒன்றுடன் நீ சேர்ந்தால் மட்டுமே நீ சிறுகுகளைப் பற்றிக் கனவு காண முடியும்” என்கிற ஓஷோவில் வரிகள் வாழ்க்கைப் பாடம்! வாழ்வை ஒரு பாடமாக மாற்ற விரும்பாதவர் தான் ஓஷோ. ஆனால் பாடமற்று வாழ்வதற்கும் ஒரு பாடம் தேவை அல்லவா.

ஜீரணிக்கும் தன்மை தான் ஒரு மனிதனை உயர்ந்து செல்ல வைக்கும். ஜீரணித்தல் என்பது மனிதர்களை ஜீரணிப்பது மட்டுமல்ல. கிறிஸ்து, குரான், கீதை உள்ளிட்ட எல்லாவற்றையும் ஜீரணிப்பது. ஜீரணிக்கும் முன் அவைகளை உண்ண வேண்டும் அல்லவா? ஒட்டிக்கொண்டே ஒட்டாமல் நிற்கும் வித்தையை கற்றுக்கொண்டால் ஜீரணிப்பை நோக்கி நகர முடியும். எல்லாவற்றையும் ஜீரணிக்கும் ஒருவன் நிச்சயமாக மிகப்பெரிய வாழ்வை ருசிக்க முடியும். மிகப்பெரிய வாழ்வு புறவயத்தில் நிகழ்வதில்லை. அதை அகத்தில் மட்டுமே உணர முடியும். அதற்கு அக விடுதலை அவசியம். ஒரு மனிதன் விடுதலை அடைய வேண்டுமானால் கடவுளை கொல்ல வேண்டும் என்கிறார் ஓஷோ. இதில் கடவுள் என்பது நமது மனத்திற்குள் இருக்கும் அடிமைத்தன்மையை. பெரும்பாலான ஆன்மிகள் “நான் கடவுளின் அடிமை” என்பர். நமக்குள்ளிருக்கும் இறைவனுக்கு அடிமையாக இருப்பது பிடிக்காது என்பதை ஓஷோ சுட்டுவதாக நான் புரிந்துகொண்டேன்

நிழலுக்கும் நிஜத்திற்குமான இடைவெளியை நாம் நம்புவதில்லை. நிஜத்தை நிழல் என்றும் நிழலை நிஜம் என்றும் நம்புவதில் ஒரு பொய்யின்பம் உண்டு. அதைத் தகர்க்கும் யாவற்றையும் ஓஷோ சொல்லித்தருகிறார்.

அட்லீஸ்ட் வருடத்திற்கு இரண்டு ஒஷோ புத்தகங்களாவது படிக்க வேண்டும். அதில் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த நூலில் அடிமைத்தனம் என்றால் என்ன என்பதை அறியாத நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

எல்லா துன்ப மீட்சிக்கும் அன்பு மட்டுமே நிவாரணி என்பதை நம்பும் ஓஷோவை என்றும் படிப்பேன்🤍

#Neeneeyagairu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *