நாற்பது வயதில் குழந்தை வேண்டும் என விரும்பும் பெண்ணின் கதை
காதலாகி கசிந்துருகும் ஜோடி வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட். இருவரும் முதலில் குழந்தை மீது விருப்பமின்றி தான் இருக்கிறார்கள். வனிதாவின் தோழிகள் அட்வைஸ் செய்ய வனிதா குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் ராபர்ட் மறுக்கிறார். மறுக்கா மறுக்கா வனிதா சிலபல கிளுகிளுப்பு முயற்சிகள் செய்கிறார். அத்தகைய முயற்சிகள் பலித்ததா? என்பதே கதை
கதையின் நாயகியும் படத்தின் இயக்குநரும் வனிதாவே தான். ஒகே வாக ஒப்பேற்றியுள்ளார். ராபர்ட் மாஸ்டர் ஓரளவு சமாளிக்கிறார். ஷகிலா பாத்திமா பாபு ஆகியோர் அட்டனென்ஸ் போடுகிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இன்னும் சிறப்பான இசையை வழங்கியிருக்கலாம். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே சுமார் ரகம். படத்தில் ராஜபாண்டி, விஷ்ணு இராமகிருஷ்ணன், DG கபில் என மூன்று ஒளிப்பதிவாளர்கள். மூவரும் தங்களால் ஆன உழைப்பைக் கொடுத்துள்ளனர்
படத்தின் கதையில் பெரிதாக க்ளாரிட்டி இல்லை என்பதால் படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் நடிகர்களுக்கான ரைட்டிங்கிலும் டெப்த் இல்லை. வனிதா விஜயகுமார் க்ளைமாக்ஸை மட்டும் நம்பி மொத்தப் படத்தையும் எடுத்துள்ளார். அதற்குள் ஆடியன்ஸ் டயர்ட் ஆகிவிடுவதால் இந்த மிஸஸ் மற்றும் மிஸ்டர் நம்மை ஈர்க்கத் தவறிவிடுகிறது
2.5/5
-வெண்பா தமிழ்

