ஓஹோ எந்தன் பேபி- விமர்சனம்

2K கிட்ஸ்-ஐ குறி வைத்து வந்துள்ள ஓஹோ எந்தன் பேபி படம் குறி தப்பாமல் இரையை அடித்துள்ளது

மிஷ்கினின் உதவி இயக்குநராக இருக்கும் நாயகன் ருத்ரா, படத்தில் நடிகராகவே வரும் விஷ்ணுவிஷாலிடம் கதை சொல்லப் போகிறார். ருத்ரா சொல்லும் கதையில் சேட்டிஸ்பைடு ஆகாத விஷ்ணு விஷாலுக்கு ருத்ரா தன் காதல் கதையைச் சொல்கிறார். அந்தக் கதை என்ன.. அந்தக் கதையின் முடிவு என்ன என்பதே படத்தின் ரொமாண்டிக் திரைக்கதை

கதாநாயகனாக முதல் படத்திலே முத்திரைப் பதித்துள்ளார் ருத்ரா. எல்லாக் காட்சிகளின் உணர்வுகளையும் உள்வாங்கி நடித்துள்ள அவருக்கு தமிழ்சினிமாவில் ஒரு இடத்தை புக் பண்ணி வைக்கலாம். நாயகி மிதிலா பாஸ்கர் ஒரு வகையில் ஸ்கோர் செய்தால், அஞ்சுகுரியன் மற்றொரு ஏரியாவில் அசத்துகிறார். இயக்குநராக வரும் மிஷ்கின், ஹீரோவாகவே வரும் விஷ்ணு விஷால், ரெடின் கிங்ஸ்ட்லி என காஸ்டிங் அனைவருமே மாஸ் செய்துள்ளனர்

ஹரிஷ் கண்ணனின் சிறப்பான கலர் வண்ணங்கள் விஷுவலில் ப்ளீச்சிடுகின்றன. தரமான ப்ரேமிங்கால் அசத்தியுள்ளார். ஜென் மார்டின் இசையால் படத்திற்கு பெரும் எனர்ஜி ஏற்றியுள்ளார். பாடல்கள் எங்கும் இளமைக் கொண்டாட்டம்

காதலை முதிர்ச்சியோடு அணுகும் தலைமுறை இது என பதிய வைத்ததில் இயக்குநரின் அக்கறை தெரிகிறது. ஆர்.சி. பிரணவ் கிருஷ்ணகுமார், ராம்குமார் எழுத்துக்கூட்டணி ஒரு வெற்றிக்கதையை மனதில் வைத்தே செயல்பட்டிருக்கிறது. அந்தச் செயல் வெற்றியை எட்டியுள்ளது

ஓஹோ எந்தன் பேபி- ஆஹா வீக் எண்ட் ஜாலி
3.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *