ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் இருவரும் சகோதர அசுரர்கள். இவர்களிருவரும் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். கடவுள் என்றால் நேரில் அல்லவா வர வேண்டும். நேரில் வராத ஒருவரை எப்படி கடவுள் என்பது? So இப்படி உலகை ஏமாற்றும் விஷ்ணுவை கண்டுபிடித்து அழிப்பேன் என சபதமெடுக்கிறார் ஹிரண்யாக்ஷன்.
இதற்காக தன் அண்ணனிடம் ஆசிபெற்று பூமாதேவியை சிறைபிடிக்கிறார். இதனால் பிரம்மதேவனிடம் தேவர்கள் மன்றாடுகிறார்கள். வராக அவதாரத்தில் தோன்றும் விஷ்ணு, ஹிரண்யாக்ஷனுடன் சண்டையிட்டு அவரை கொன்று பூமாதேவியை மீட்க, அடுத்து யாராலும் வெல்ல முடியாத வரம் ஒன்றை வாங்குகிறார் ஹிரண்யகசிபு.
எத்தனை வெல்ல முடியாத வரம் வாங்கினாலும் இறைவனால் எதுவும் சாத்தியம் அல்லவா? யெஸ் பாசிட்டிவாக படம் முடிகிறது
அனிமேஷனில் இந்திய சினிமா அடுத்தக் கட்டத்திற்குப் பாய்ந்துள்ளது என்பதற்கு இப்படம் உதாரணம் எனலாம். மிகச்சிறப்பாக உழைத்துள்ளது அனிமேஷன் டீம். தமிழில் வசனம் அத்தனை நேர்த்தியாக அமைந்துள்ளது. சாம்.சி.எஸ் தன் இசை மூலம் ஆன்மிக தாண்டவம் ஆடியுள்ளார். தரம் ஆகத்தரம்
இதிகாச புராணங்களில் உள்ள பாசிட்டிவ் கதைகள் எப்பவுமே மக்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும். அதைச் சரியாக கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் அஸ்வின் குமார். ஹொம்பாலே பிலிம்ஸ் படத்தைத் தரமாக தயாரித்துள்ளது. இந்த வீக் என்ட்-ஐ ஜாலியாக கழிக்க உத்திரவாதம் தருகிறது மஹாவதார் நரசிம்மா
3.5/5
-வெண்பா தமிழ்

