வெற்றித்திருமகன் ஆன சக்தி திருமகன்
நேற்று நடிகர் விஜய் ஆண்டனி பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள சக்தி திருமகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் வித்தியாசமாக பிரியாணி கட் பண்ணி விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். மேலும் சக்தி திருமகன் படம் பற்றிப் பேசும்போது நிறைய பாசிட்டிவ் விசயங்களைப் பேசினார். இயக்குநர் அருண் பிரபு பற்றிக் கூறும்போது, “அருண் பிரபு இன்னும் பெரிய இந்தி ஹீரோக்களுக்கு எல்லாம் படம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர் உலக அளவில் கவனம் பெறுவார். ஏன் என்றால் அவரிடம் உலக லெவல் கன்டென்ட் இருக்கிறது” என்றார். மேலும் பத்திரிகையாளர் ஒருவர் சக்தி திருமகன் வெற்றித் திருமகன் ஆவாரா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு படக்குழு மொத்தமும் பாசிட்டிவ் ரியாக்சன் கொடுத்தார்கள்.

