வடசென்னை தாதாவிற்கும், பெண் உதவி கமிஷ்னருக்கும் நடக்கும் ஒன் டூ ஒன் யுத்தமே இந்த மதராஸ் மாபிஃயா கம்பெனி
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிங்- போல வடசென்னையில் வாழ்ந்து வருகிறார் ஆனந்த்ராஜ். அவரை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்யப் போராடுகிறார் உதவி கமிஷ்னர் சம்யுக்தா. மேலும் ஆனந்த்ராஜை அவரைச் சுற்றி இருப்பவர்களே போட்டுத்தள்ள நினைக்கிறார்கள். ஆனந்த்ராஜ் வீழ்த்தப்பட்டாரா…என்பதும் எப்படி வீழ்த்தப்படுகிறார் என்பதுமே படத்தின் கதை
பெரிய வில்லனாக நடித்த ஆனந்த்ராஜ், சமீபத்தில் வேறலெவல் காமெடியனாக உருமாறிவிட்டதால், இந்தப்படத்தில் அவரை தாதாவாக கனெக்ட் செய்ய முடியவில்லை..பல இடங்களில் சாதாவாகவும், சில இடங்களில் ஸ்பெசல் சாதாவாகவும் தான் அவர் தெரிகிறார். சம்யுக்தா உடல் தோற்றம் முதல் மிடுக்கு, சொடக்கு எல்லாமே போலீஸ் மேனரிசத்தோடு செய்கிறார். இருப்பினும் அவரது பெர்பாமன்ஸில் லைட்டா ஓவர் ஆக்டிங் தெரியுது. முனிஷ்காந்த் காமெடி செய்ய முயற்சித்து கம்பெனியை லாஸ் செய்துள்ளார். வேறு கேரக்டர்கள் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை
ஸ்ரீகாந்த் தேவா இசை. பாடல்கள் பின்னணி இசை இரண்டிலுமே தப்பித்துக்கொள்ளும் படியான ஒப்பேற்றல் இருந்தது. ஒளிப்பதிவாளர் கூடுமான வரை வட சென்னை உலகை தத்ரூபமாக காட்ட முயற்சித்துள்ளார். எடிட்டர் இன்னுமே படத்தை ஷார்ப் செய்திருக்கலாம்
வட சென்னை தாதா கதை என்றால் நிச்சயமாக தெருவிற்கு தெரு கதை கிடைக்கும். அதில் பல யூனிக் கன்டென்ட் கூட சிக்கியிருக்கும். ஆனால் இயக்குநர் முகுந்தன், இதைப் பக்கா கமர்சியல் படமாகத் தான் உருவாக்க வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டுள்ளார். ஓரளவு கமர்சியல் அம்சங்களும் படத்தில் இருக்கின்றன..என்ன Full fill பண்ணவில்லை
மதராஸ் மாபிஃயா கம்பெனி- முழுதாக மோசமில்லை
2.5/5
-வெண்பா தமிழ்

