எளிய பெண்ணின் பெரிய கனவு!
நிலச்சரிவு ஏற்படும் மலை கிராமத்தில் வாழ்கிறார் பிரியங்கா மோகன். அப்பா அம்மாவிற்கு ஒரே மகள் அவர். அவரின் பெரிய ஆசை கொரியா செல்லவேண்டும் என்பது. அதற்கான முயற்சியில் அவர் இறங்கும் போது அவருக்கு வீட்டில் கல்யாண ஏற்பாட்டைச் செய்கிறார்கள். ஆனால் பிரியங்கா மோகன் ஊரில் தான் காதலிக்கும் ரிஷிகாந்த் உடன் வெளியூர் சென்று விடுகிறார். அதன்பின் காதலால் பிரியங்கா மோகனுக்கு ஒரு சிக்கல் வருகிறது. மேலும் கொரியா செல்லும் அவர் என்னென்ன அனுபவங்களை கண்டார் என்பதே மீதிப் படத்தின் கதை
ஆரம்பத்தில் கிராமப்பெண்ணாக நமக்குள் நுழைய மறுத்தாலும், போகப்போக தன் வெள்ளந்தித்தன நடிப்பால் கிராமப்பெண்ணாக மனதில் பதிந்துவிடுகிறார் பிரியங்கா மோகன். கொரியாவில் ஒரு பாட்டியோடு வரும் எமோஷ்னல் காட்சியில் பின்னியெடுத்துள்ளார். கொரிய நடிகர்களில் நோஹோஜின், பார்க்ஹேஜின், ஜாங் ஜாய் ஈயோன் என அனைவரும் கச்சிதமாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் சோகத்தோடே படமெங்கும் வருகிறார்
கொரியாவின் அழகியலையும், நம்மூரின் நிலவியலையும் அழகாக கண்களுக்கு கன்வே செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார். ஹெஷன் அப்துல் வாஹப் பின்னணி இசையை ஆகச்சிறப்பாக வாசித்துள்ளார். பாடல்களிலும் பாசிட்டிவ் வைப்-ஐ Feel பண்ண முடிகிறது
ரா கார்த்திக் ரைட்டிங்கில் அருமையான மெச்சூட் தென்படுகிறது. குறிப்பாக கொட்டாம்பெட்டியாக இருந்தாலும், கொரியாவாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணும் தனித்தியங்கி தன்னை நிரூபிக்கும் ஆசையை தனக்குள் வைத்துள்ளாள் என்பதை அழகாக சொல்லியுள்ளார். மேக்கிங்கும் தரமாக அமைந்துள்ளது. படம் முடியும் போது நமக்குள் படரும் ஹோப், நெட்ப்ளீக்ஸில் உள்ள இந்தப்படத்தை மறுபடியும் ஸ்ட்ரீமிங் செய்ய வைக்கிறது
3.25/5
-வெண்பா தமிழ்

