மீண்டும் ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட ஆவணமாக ஒருபடம்
நிறைசூலி தெய்வம் என்ற தெய்வத்திற்கு சேவல் பலியிட்டு படையல் கொடுக்க வருகிறார்கள் கலையரசன் குடும்பத்தினர். தனது 9 மாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு கலையரசனும் வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடியை கொல்லத்துடிக்கிறது ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த நாயகியின் அப்பா குடும்பம். முடிவு என்ன என்பது கதை
கலையரசனை கொலைசரனாகவே நிறைய படங்களில் காட்டுகிறார்கள். அவரும் சளைக்காமல் படத்திற்குப்படம் வெட்டுப்பட்டோ குத்துப்பட்டோ காலங்கழிக்கிறார். சீக்கிரம் ஒரு ஆக்சன் அவதாரம் எடுங்க சகோ. நடிப்பில் ஆச்சர்யம் காட்டியது நாயகி தீபாபாலு தான். அடடா என்னவொரு அற்புதமான நடிப்பு. க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் நடிப்புதான் அந்தக் காட்சியை பதைபதைப்பாக்குகிறது. பால சரவணன், கஜராஜ், ஆதவ் சன்ரா உள்ளிட்ட பலரும் கொடுத்த வேலையைச் சரியாகச்செய்துள்ளனர்
PG முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் முத்தாய்ப்பு சம்பவம். அருமையான லொகேசனை மிக அருமையாக தனது கேமராவுக்குள் அள்ளிக்கொண்டு வந்துள்ளார். சந்தனின் இசை படத்தின் பெரியபலம். காதல் பாடல் ஒன்றும் சிறப்பாக இருந்தது
படத்தின் கதை ஆணவக்கொலைக்கு எதிரானது. ஆனால் படத்தில் இயக்குநர் துதிவானன் ஒரு ஸ்டேட்மெண்ட்-ஐ தான் சொல்லியிருக்கிறாரே தவிர, எந்தத்தீர்வும் சொல்லவில்லை. குறிப்பாக சில காட்சிப்படுத்தல்கள் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கவேண்டும் என போர்சாக வைக்கப்பட்டுள்ளது. அவை நமக்குள் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
படத்தில் நம்மை ஈர்க்கக்கூடிய அம்சமாக இருந்தது காதல் காட்சிகள் தான். அந்த போன் நம்பர் ஐடியாவும், அம்மா செண்டிமெண்டும் சூப்பர். படத்தில் இவை மட்டுமே ஆறுதல். மேலும் படம் எந்தவிதமான ஹோப்-ம் இன்றி முடிவடைவதால் நமக்கு Take away என்று படத்தில் ஒன்றுமில்லை
2.5/5
-வெண்பா தமிழ்

