குட்டிமா- நூல் விமர்சனம்

“செ*க்ஸ் வேற..காதல் வேற.. இரண்டும் கரெக்டா அமைஞ்சா அது பெரிய கிப்ட்” இப்படியொரு க்ளாரிட்டிக்கு கதையோட லீட் கேரக்டர் வரும்போது கதை நிறைய கடந்து போயிருக்கும். இந்த உலகத்தில ஈசியான விசயங்களை புரிஞ்சிக்கிறதுக்கு நாம ரொம்ப சிரமப்படுறோம்ன்றதை ரொம்ப எளிமையாச் சொல்லிருக்கார் ரைட்டர் அராத்து. வழக்கம் போல கதையை நகர்த்திச் செல்லாமல், பறக்க வைத்துள்ளார். நேரம் நிறைய இருப்பவர்கள் ஒரே தம்மில் வாசிக்க முடியும். நேரம் குறைவாக இருப்பவர்கள் நேரத்தை நீட்டித்து வாசிக்க முனைவார்கள். நான் அப்படித்தான் வாசித்தேன். சினிமா பங்ஷன் இடைவெளி, ரயில் பயணம் என கிடைத்த நேரங்களிலெல்லாம் குட்டிமாவோடு பயணப்பட்டேன்

சிந்து, வீணா, வஞ்சி மூன்று பெண்ணான்மாக்களின் பயணம் தான் குட்டிமா. பள்ளி மாணவியாக இருக்கும் போது சிந்து தன் வளர்ப்புத் தந்தை தன் வளர்ப்பு தாயோடு புணர்தல் நிமித்தம் மேற்கொண்ட ஒரு அதிதீவிர காட்சியைக் காண்கிறாள். அந்தக் காட்சி அவளின் பால்யத்திலும், பருவத்திலும் அவளை தொந்தரவு செய்கிறது. பேரழகியான அவள் சந்திக்கும் எல்லா ஆண்களிடமும் அவள் எதிர்பார்ப்பது ஒன்றும், கிடைப்பது ஒன்றுமாக இருக்கிறது.

அடுத்தது வீணா! சினிமா & மீடியா என சென்னையில் பயணிக்கும் அவள் வாழ்வு வேட்கை நிறைந்த ஒன்று. காம வேட்கை மட்டுமல்ல, அன்பின் நிமித்தம் பாசாங்கற்ற ஒரு தன்மையை எதிர்நோக்குபவள். வைப் என்ற உதவி இயக்குநரின் நுழைவு அவள் வாழ்வுக்கு சின்ன நம்பிக்கையைத் தருகிறது. ஆனால் அதன் பின்னால் பெரும்பாலான ஆண்களின் இயல்பு குணம் அவனையும் ஆட்கொள்ள வைப்-ஐ விட்டு வீணா விலகும் சூழல் நிகழ்கிறது. அதன்பின் அவள் கண்டடையும் புணர்தல் ஞானம் வியப்பிலும் வியப்பு!

சிந்துவின் காயங்களும் வீணாவின் ஏமாற்றங்களும் சேர்ந்து வஞ்சி என்ற பெண்ணை எல்லா கல்ச்சர் கேட்டுகளையும் உடைக்க வைக்கிறது. அவளின் வீரியம் தான் நாவலில் அடிப்பொலி மற்றும் அதிர்ச்சி தெரபிக்கல்

சென்சார் இல்லாத
/ தேவைப்படாத சொல்லாட்சியை வஞ்சி வீசியெறியும் போதெல்லாம் சில இடங்களில் தலைகுனிந்து வாசிக்கும் நமக்கு சின்னதாக தலைகுனிவே ஏற்படுகிறது😄😄 (Male என்ற ரீசன் தான்)

இந்த மூன்று கேரக்டர்களும் ஒன்றிணையும் இடத்தை உடைத்துச் சொன்னால் வாசிக்கையில் ட்விஸ்ட் இருக்காது. சோ விட்டுரலாம்

காமம் தான் வாழ்வின் பிரதானம் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, வெளியில் மறைத்து வாழ்ந்தால் இனி வஞ்சிக்கள் ஆணினத்தை வஞ்சித்தே தீர்வர். வஞ்சியின் உலகத்தை ஆண் பார்வையில் பார்த்தால் அதிர்ச்சி நிச்சயம். பெண் பார்வையால் பார்த்தால் மகிழ்ச்சி நிச்சயம். பொதுப்பார்வையோடு அணுகினால் இந்த நாவல் நல்ல புரிதலையே தரும். Then இது ஒரு பக்கா வெப்சீரிஸ் மெட்டிரியல். ஒரு நல்ல இளம் இயக்குநர் கையில் கிடைத்தால் Four more shot pls இந்தி சீரிஸுக்கே டப் கொடுக்கலாம்

(பர்சனலாக எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம். நாவலின் மெயின் கேரக்டர்கள் எல்லோருமே வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி வந்த பராசக்தி படத்தில் ஹீரோவோ, ஏனைய பாசிட்டிவ் கேரக்டர்களோ புத்தகத்தை கையில் தொட்ட மாதிரி ஒரு ஷாட் கூட இருக்காது. இந்தி எதிர்ப்பில் வீரியமாக பங்களித்தவர்களின் மகன்களை எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் பெரும் வாசிப்பும் அரசியல் புரிதலும் உள்ளவர்கள். அண்ணர் அராத்து ஒரு கிஸ்மாத்தான தத்துவம் பேசும் நாவலில் வாசிப்பை இன் டைரக்டாக மோட்டிவேட். செய்கிறார் 🥰🥰மகிழ்ச்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *