கருப்பாயி எனும் நூர்ஜகான்- நூல் விமர்சனம்

“நாட்டை அழிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்”னு அய்யா எழுதுன அகிலத்திரட்டுல ஒரு வார்த்தை வரும். ஆச இருந்தும் கல்யாணம் முடிச்சிக் கொடுக்காத..கல்யாணம் கை கூடாம இருக்க பொட்டப்பிள்ளிய வீட்டுல இருந்தா அது நாட்டுக்கும் வீட்டுக்கும் சங்கடம்னு சொல்வாக..

நாப்போத்தோரு வயசாகியும் கல்யாணம் முடிக்க எவனும் வராம உயிரைப் போக்குறா இந்த நாவல்ல வர்ற நூர்ஜகான். அவளோட முதப்பேரு கருப்பாயி..அவ மட்டும் இல்லாம அவ அம்ம, அப்பா எல்லாரு பேரும் முதல்ல வேற…

“செருக்கிவுள்ளியா நாங்க இந்தச் சாதி அந்தச் சாதிங்க அடையாளத்துல இருந்தாத் தானல நீங்க அடிமைப் படுத்தத் துடிப்பிய..பாயா மாறிட்டா நாங்க சோல்டரை நிமுத்துவோம்லானு அந்தக்காலத்துல செங்கோட்டை பக்கத்துல உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமமே முஸ்லிமா மாறிச்சிது.”. அதை அடித்தளமா கொண்ட நாவல் இது.

ஆனா கொடும என்னன்னா..மதம் மாறுன நூர்ஜகான் குடும்பத்தை யாரும் ஏறெடுத்துப் பாக்கல. அந்த ஊர்ல யாரையும் வெளி சனம் முஸ்லிமா பார்க்கல.. வேற சாதி முஸ்லிமும் அவங்களை முஸ்லிமா பார்க்கல..அப்படித் தான் போகுது நாவல். மெயின் விசயம் இந்த நாவலை எழுதுனவரு அன்வர் பாலசிங்கம். அவரு ஒரு முஸ்லிமு. (இங்க பூராப்பயலும் எப்ப எவன் மாட்டுவான்னு இருக்க காலத்தில அவரு ஏன் இப்படி ஒருநாவல் எழுதினார்னு அவருக்குத் தெரிஞ்ச ஒரு ஆள்ட்ட கேட்டேன். அவருக்கு என்ன அனுபவமோ? யாரு கண்டான்னு பதில் வந்தது)

“சமூகத்துல சாதிபெருசா? மதம் பெருசா?”ன்னு கேட்டதுக்கு பெரியார் சாதி தான் பெருசுன்னார்.

ஏன்னா ஒரு கிறிஸ்டின் இந்துவா மாறிடலாம். ஒரு இந்து முஸ்லிமா மாறிடலாம். ஆனா ஒரு தேவர் நாடாரா மாற முடியாது. அதனால் அறுக்க வேண்டிய ஆடு ஜாதி தான். செங்கோட்டையில தாம் பொட்டப் பிள்ளைக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டு காலையில மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றாங்கன்னு ரண்டு ஆட்டை அறுத்துப் போட்டு ஊரையே கூட்டி வச்சிட்டு இருக்கான் பொண்ணப் பெத்த தவப்பன். வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரன்வ அது எஸ்.ஸி வீட்டு முஸ்லிமு பொண்ணுனு டாக்ஸிக் காரன் சொன்னதும், அப்படியே ஓடிப்போயிருதான்வ. மனசு கேட்காம காத்துக்கிடந்த தவப்பன் செங்கோட்டையில போய் விசாரிச்சுட்டு விசயம் தெரிஞ்சதும் ஆட்டுக்கறியை ஊருக்குக் கொடுத்துட்டு ” மாப்பிள்ளை வீட்டுல நாளைக்கு வர்றாங்களாம்” னு பொய்ச் சொல்லிட்டு போய் தூக்குல தொங்கிட்றாரு. இது நடந்த கதையா தான் இருக்கும்னு தெரிஞ்சதும் கொஞ்சம் நெஞ்சடச்சிப் போச்சி.

நூர்ஜகான் செத்துட்டான்னதும் அவ அப்பன், அம்ம,சித்தி எல்லாரும் கூடவே போய்ச்சேர ஊர் மொத்தமும் விக்கி நிக்க இடம்லாம் மாறாத ரண தடம்.

கடவுள் மட்டும் இன்னன்ன ஜாதின்னு பட்டியல் போட்டாச்சுன்னா இங்க ஒரு பயலும் வேற சாதி சாமிவளை கும்பிடவே மாட்டான். அந்தளவுக்கு சாதி இங்க புரையோடிக் கிடக்கு. நம்ம சாதியை அடுத்தவன் விமர்சனம் பண்ணக்கூடாது…நாம பண்ணிறவே கூடாதுனு இருக்க காலத்துல இந்த சுயமத விமர்சன நாவல் கொஞ்சம் பேசப்படும்னு நினைக்கேன்.

மாறுற மதம் நமக்கு எல்லாம் பண்ணும்னு சொல்வாக. ஆனா அது ஜாதியை ஒரு மயிறும் பண்ணாதுன்னு நச்சின்னு சொல்லுத நாவல் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *