கட்ஸ்- விமர்சனம்

கட்ஸ் என்றால் துணிவு! இந்தத் துணிவிற்குப் பின்னால் உள்ள மர்மத்தைப் பேசுகிறது படம்

படத்தின் இயக்குநர் ரங்கராஜ் தான் படத்தின் ஹீரோவும். படத்தில் அவரது தந்தை கொலை செய்யப்படுகிறார். தந்தையற்ற மகனாக வளரும் ஹீரோ தன் தாய் சுருதி நாராயணன் ஆசைப்படி போலீஸாகிறார். காலம் கடக்க மனைவி மகள் என குடும்பமாகிறார். துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி நான்சியும் கொலை செய்யப்படுகிறார். இந்த இரு கொலைகளுக்கான காரணி என்ன என்பதே படமாக விரிகிறது

இயக்குநரே நாயகன் என்பதால் கதையின் ஆழம் உணர்ந்து நடித்துள்ளார் . தந்தை மகன் என இரு கேரக்டர்களுக்கான வித்தியாசத்தைக் காட்டி ரங்கராஜ் நடிகராக பாஸ்மார்க் வாங்குகிறார். சுருதி நாராயணன் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். நான்சி கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. ஏனைய கேரக்டர்கள் பலரும் கவனம் ஈர்க்கிறார்கள். நடிகர்களின் தேர்வில் படம் தேறியிருப்பது ஆறுதல்

படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் தனது பணியை திறம்படச் செய்துள்ளார். கதைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன்களும் சிறப்பு. பின்னணி இசையால் படத்தை முன்னிலைப் படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்ளின். பாடல்களும் படத்திற்கு நல்ல மைலேஜைக் கொடுத்துள்ளது

கதையில் நல்ல மோட்டிவை வைத்துள்ள இயக்குநர் திரைக்கதையில் மிகவும் சொதப்பியுள்ளார். கதை என்பது கர்த்தா. திரைக்கதை என்பது கருவி. அந்தக் கருவியைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், இந்த கட்ஸுக்கு நாம் துணை நின்றிருக்கலாம்.

கட்ஸ்- கதையில் மட்டும்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *