ஆன்லைன் கடனால் ஏற்படும் அவதியைச் சொல்லும் படம்
ஹீரோ நிவாஸ் ஆதித்தன் கொடும் கொரோனா காலத்தில் வேலையை இழக்கிறார். அதனால் ஆன்லைனில் சூதாடுகிறார். சூதாட்டம் அவரை உள்ளே இழுக்கிறது. சூதாட்டத்திற்காக ஆன்லைனில் கடனை வாங்குகிறார். கடன் கொடுத்த ஆன்லைனார்கள் நிவாஸ் ஆதித்தன் வீட்டிற்கே வந்து தொந்தரவு செய்கிறார்கள். ஹீரோ நிவாஸ் ஆதித்தன் இதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை
நிவாஸ் ஆதித்தன் தனது கேரக்டரின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கடன்பட்டவரின் உடல்மொழியை கச்சிதமாக கொண்டு வந்துள்ளார். அபிநய் கொடூர முகம் காட்டி அசத்தியுள்ளார். எஸ்தர், ஆத்விக் ஆகியோர் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை.
சிக்கனமான பட்ஜெட்டில் எவ்வளவு திறமையை காட்ட முடியுமோ அந்தளவிற்கு காட்டி படத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சபரி. ஜோஸ் காஸ்டா இசையில் தன்னால் முடிந்த எல்லா எபெக்டையும் போட்டுள்ளார். சஜயன் ஆர்ட் டைரக்டர் ஒகே.
கடன் வாங்குவது எளிது. அதை அடைக்க முடியாமல் போனால் அது தரும் துன்பம் மிகப்பெரிது என்பதை படம் பேசுகிறது. கதையாக ஒகே என்றாலும் திரைக்கதை ஆங்காங்கே டல் அடிக்கவே செய்கிறது. நல்ல மெசேஜ் என்பதற்காக இயக்குநர் அபிஷேக் லெஸ்லியைப் பாராட்டலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

