டியூட்- விமர்சனம்

ஜென்ஸி ஜெனரேசனை குறி வைத்து ஏவப்பட்ட ஹார்ட்டீன் தான் இந்த டியூட்

“என்ற காதலி ஒன்ற மனைவி ஆகலாம். பட்சே ஒன்ற மனைவி என்ற காதலி ஆக முடியாது” என்ற பாக்கியராஜ் பட டயலாக்கை சற்று மாற்றிப்போட்டால் அதுதான் டியூட் படத்தின் கதை

காதல் தோல்வியில் கிடக்கும் ப்ரதீப் ரங்கநாதன் மீது அமைச்சர் சரத்குமார் மகளான மமிதா பைஜுக்கு லவ் வருகிறது. (சரத் ப்ரதீபிற்கு தாய்மாமா) ப்ரதீப் அந்த லவ்வை நிராகரிக்கிறார். அதன்பின் ப்ரதீபிற்கு மமிதா பைஜு மீது காதல் வருகிறது. அது கல்யாணம் வரை செல்கிறது. சரத்குமார் அமைச்சர் என்பதால் கல்யாணத்தை தடபுடலாக ஏற்பாடு செய்கிறார். But இந்த நேரத்தில் தான் ஒரு ட்விஸ்ட்! என்னன்னா அந்த சின்ன கேப்பில் மமிதா பைஜுக்கு இன்னொருவர் மீது லவ் வந்துவிடுகிறது. அதன்பின் நடக்கும் தடால்புடால் கலாட்டா தான் கதையே

ஹீரோவாக ஹாட்ரிக் அடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் பெர்பாமன்ஸிலும் பட்டையக் கிளப்பியுள்ளார். அழுகை, அசால்டு, கோபம், பாசம் என எல்லா எமோஷ்னலும் அசத்தலாக வருகிறது அவருக்கு. கிரேட் மேன்! மமிதா பைஜு! அடடா.. அழகு மட்டுமா.. நடிப்பிலும் மிரட்டியுள்ளார். க்யூட் ரியாக்சன்ஸ் மட்டுமல்ல எல்லா ரியாக்சன்ஸும் அவருக்கு அத்துப்பிடி போல! ஆச்சர்யம் கொடுத்தது சரத்குமார்! அவரை இப்படியொரு கேரக்டரில் பார்ப்பதற்கே இன்ட்ரெஸ்டிங்! மனிதர் பின்னியிருக்கிறார். வேறுபல கேரக்டர்களும் தங்கள் பணிகளை செவ்வனே செய்துள்ளனர்.

நிகித் பொம்மி சினிமாட்டகிராபியில் அடுத்தக் கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் இரைச்சல் அதிகம் என்றாலும் போகப் போக செட் ஆகிவிடுகிறது

தாலி என்பது தமிழ்சினிமாவின் ஆகப்பெரிய செண்டிமேண்ட் ப்ராபர்டி. But அதைத் தூக்கிப்போட்டு தாக்கியுள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். “தாலிக்கு இல்ல எமோஷ்னல்! அதைத் தாண்டியுள்ள பெண்ணின் Feel-க்கு தான் எமோஷ்னல்” என்பதை இயக்குநர் கன்வே பண்றார். ரைட்டிங், ஆக்டிங், மேக்கிங், ஸ்டேட்ஜிங் என எல்லா டிங்கும் டிக் தான். இவையெல்லாம் முதல் பாதியில்! இரண்டாம் பாதியில் எல்லாமே டல் அடித்தாலும், படம் ஹிட் அடிக்கும் என்றே தோன்றுகிறது. ஏன்னா குறை இருந்தாலும் படம் என்கேஜ் பண்ணுது டியூட்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *