முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு சில நாட்கள் கழித்து நடந்த சம்பவத்தை கதையாக்கியுள்ளார் இயக்குநர் சத்யசிவா
ராமேஸ்வரத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் 43 மூன்று பேர்களை போலீஸ் இழுத்து வந்து அடித்து துன்பப் படுத்துகிறார்கள். விசாரணை என்ற பெயரில் அவர்கள் செய்யும் வலிமிகுந்த டார்ச்சர்களை பொறுக்க முடியாமல் ஒரு குழு தப்பிக்க முயற்சிக்கிறது. அதில் சசிகுமாரும் ஒருவர். சசிகுமார் தப்பித்தாரா என்பதே கதையாக விரிகிறது
கதையின் நாயகனாக சசிகுமார் போலீஸ் அடிகளை தாங்கிக்கொள்வதைப் போல, படத்தையும் தாங்கிக்கொண்டுள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் நடிப்பில் நல்ல முன்னேற்றம். லிஜோமோல் சசியின் மனைவியாக எக்கச்சக்க ஸ்கோர் செய்துள்ளார். இன்னும் அவரை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். இதர நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை
எஸ்.எஸ் உதயகுமார் ஒளிப்பதிவில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். அவரின் உழைப்பு விஷுவலில் தெரிகிறது. ஜிப்ரான் பின்னணி இசையில் அழுத்தமான உணர்வுகளை பதிய வைக்கிறார்
படம் மிகவும் கனமான ஒரு விசயத்தைப் பேசியுள்ளது. ஆனால் பேசியுள்ள விதம் சில இடங்களில் ஆடியன்ஸை அயர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இருக்கிறது. படத்தின் ஆழத்தை கச்சிதமாக வடிவமைத்த இயக்குநர் திரைக்கதையில் இன்னுமே கவனம் செலுத்தியிருக்கலாம். இருந்தாலும் இதுவொரு நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை
3/5
-வெண்பா தமிழ்

