Fourth floor- விமர்சனம்

நான்குமாடி கட்டடத்தில் பேய் இருக்குதா? அது பயம் காட்டுதா?

ஆரி அர்ஜுனன் ஐடியில் வேலை செய்து வருபவர். மும்பையில் வசிக்கும் அவருக்கு அவரது முன்னாள் காதலி போனில் அழைத்து சென்னைக்கு வந்து தனக்கு ஒரு உதவி செய்யவேண்டும் என கேட்கிறார். உடனே சென்னைக்கு வரும் ஆரி ராயல் டவுன் எனும் அப்பார்ட்மெண்டில் போர்த் ப்ளோரில் தங்குகிறார். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அதன்பின்னணியை விவரிக்கிறது படத்தின் திரைக்கதை

கதைக்கு என்ன தேவையோ அதை தனது நடிப்பின் வழி வெளிப்படுத்தியுள்ளார் ஆரி அர்ஜுனன். காதலனாக, கண்டிப்பானவராக, தந்தையாக என எல்லாப் பரிமாணங்களிலும் இயல்பை மீறாமல் நடித்துள்ளார். நாயகிகளாக தீப்ஷிகா, பவித்ரா இருவரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர். ஒரு முழுமையான வில்லனாக சுப்பிரமணிய ஷிவா அசத்தியுள்ளார். அவரின் வலுதுகரமாக வரும் புரொடக்சன் மேனஜர் கார்த்திக் அசரடித்துள்ளார். ஆதித்யா கதிர் கிடைக்கும் சின்னச்சின்ன கேப்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஜே.லக்‌ஷ்மன் நல்ல ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். ஹாரர் பேஸ் படங்களுக்கு லைட்டிங் ஆங்கிள்ஸ் எவ்வளவு முக்கியமென உணர்ந்து உழைத்துள்ளார். இசையமைப்பாளர் தரன்குமார் ஒரு தந்தைமகள் பாடலில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பின்னணி இசை சிற்சில இடங்களில் ஓங்கி ஒலித்தாலும், பல இடங்களில் படத்தைத் தாங்கிப்பிடித்துள்ளது

ஒரு அப்பார்ட்மெண்ட்-ஐ வைத்து வெவ்வேறு எமோஷ்னலுக்குள் செல்கிறது திரைக்கதை. காதல் காட்சிகளில் இயக்குநர் L.R.சுந்தரபாண்டி இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம். காட்சிகள் வழியாக நமக்கு சில ட்விஸ்ட்கள் அறிமுகமாவது இன்ட்ரெஸ்டிங்! ஹாரர் கலந்த எமோஷ்னல் பட விரும்பிகள் போர்த் ப்ளோருக்குள் நிச்சயமாக செல்லலாம். But திரைக்கதை எனும் கிரவுண்ட் ப்ளோரை இன்னும் ஸ்ட்ராங் செய்திருக்க வேண்டும். பைனலாகச் சொல்லப்படும் மெசேஜ் Good one
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *