தமிழக ஆந்திரா எல்லைக்குள் நடக்கும் பெரும் கொலையாட்டமும், தீவிர விசாரணையும் தான் இந்த தடயம்
1999 கால கட்டத்தில் நடக்கும் கதை இது. தமிழகத்தில் ஒரு கிராமத்தில் எஸ்.ஐ ஆக இருக்கிறார் சமுத்திரக்கனி. காவல்துறைக்குள் இருக்கும் இன்டெர்னல் பாலிடிக்ஸால் பாதிக்கப்பட்டிருப்பவர் அவர். அதனால் வேலையில் ஏனோ தானோ என இருக்கிறார். அந்த ஏரியாவில் இரு சைக்கோக்களால் கொடூரமான கொலைகள் நடக்கிறது. இச்சூழலில் அந்த ஸ்டேசனுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் ஷிவதா. ஷிவதாவின் வருகைக்குப் பிறகு சமுத்திரக்கனி தொடர் கொலைகள் சம்பந்தமாக அதி தீவிரமாக விசாரணையில் இறங்குகிறார். விசாரணையின் முடிவு என்ன என்பது சீரிஸின் மீதிக்கதை
சமுத்திரக்கனியின் ஆரம்பக் காட்சிகளில் எதார்த்தம் மின்னுகிறது. அவரும் மிகச்சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். கருணை ததும்பும் முகத்தோடு காட்சியளிக்கும் காட்சி ஒன்றில் அவர் விசாரணை படத்தை நினைவூட்டுகிறார். ஷவிதா ஸ்வீட்ஸ் சர்ப்ரைஸ். இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு ஆரம்பத்தில் சற்று பொருத்தமில்லாமல் தெரிந்தாலும் போகப்போக ஈர்த்துவிடுகிறார் கொலைகள் செய்பவர்களாக வரும் இரு நடிகர்கள் அசத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் நிறைய சிக்கனங்களை ஷாட்களில் காட்டியுள்ளார். இன்னும் சீறிப்பாய்ந்திருக்கலாம். இசையமைப்பாளர் அற்புதமான உழைப்பைப் போட்டுள்ளார். சிறப்பு. கிளைமாக்ஸில் வரும் பாடலும் பின்னணி இசையும் அட்டகாசம்
நமது காவல்துறைக்கு தடயங்கள் என்பது மிக முக்கியமானது. குற்றவாளிகளை கண்டு பிடிக்க அவர்கள் அறியாமல் விட்டுச்செல்லும் தடயங்களை சேகரிப்பதும், எவை தடயங்கள் என கண்டுபிடிப்பதும் பெரும் சவால்..இந்த சீரிஸில் இதைப்பற்றி ஒரு இடத்தில் அழுத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் நவின்குமார் பழனிவேல். ஒவ்வொரு எபிசோடும் ஷாட்-ஆக முடிந்தாலும், நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாமோ என தோன்றியது. சிக்கனமான மேக்கிங் என்பது ஆங்காங்கே துருத்தி நிற்பது மைனஸ். இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய வெப்சீரிஸ். முதலுக்கு மோசமில்லை என்ற கேட்டகிரியில் பாஸாகிறது
3/5
-வெண்பா தமிழ்

