டோரதி- விமர்சனம்

பிற்போக்கு மனிதர்களுக்கு முற்போக்கு உலகை கற்பிக்கிறாள் டோரதி
மனித உறவுகள் அமைவதை மனது தீர்மானித்தால் போதும். பிறரைப் பற்றி யோசிக்கவேண்டாம் எனவும் சொல்கிறாள் டோரதி

சனந்த் ரிஷிகாந்த் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். சிறு வயதிலே ஆண் என்றால் கெத்து என வளர்பவர் சனந்த். சாந்தமான ரிஷிகாந்தும் சனந்தால் கவரப்பட்டு வீரதீர ஆணாக வளர்கிறார். இருவரின் நட்புக்கு சாதி தடையில்லை என்றாலும், சாதி வெறிபிடித்த சனந்த் அப்பா முத்துக்குமாருக்கும் இரு அண்ணன்களுக்கும் ரிஷிகாந்த் மேல் ஒரு வெறுப்பு உண்டு. சனந்தின் அண்ணன் செளந்தர்ராஜாவுக்கு மனைவியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதன்பின் அவரோடு நேசத்தை கொட்டுகிறார் சனந்த். அதன்பின் பல அதிர்ச்சிகள் அரேங்குகிறது. முடிவில் பாலின வேறுபாடு வெறியர்களுக்கும் பேரன்பிற்குமான போரில் யார் தோற்கவில்லை என்பது படத்தின் திரைக்கதை.

கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் போர்ட்ரைட் பண்ணப்பட்டாலும் அவர் என்னவோ கேமியோ ரோல் போல் தான் வருகிறார். ஆனால் அந்த குறைவான காட்சிகளிலும் அவ்வளவு அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். சனந்த் கதையின் நாயகனாக மிளர்கிறார். அவர் இனி எத்தனைப்படம் நடித்தாலும் இந்தப்படம் காலத்திற்கும் நின்று பேசும். ரிஷிகாந்த் இயலாமை குற்றவுணர்ச்சி ஆகியவற்றை மிகவும் அடர்த்தியாக தன் முகத்தில் காட்டி அசரடிக்கிறார். முத்துக்குமார் செளந்தர்ராஜா இருவரும் நமது வெறுப்பை பலமாக சம்பாதிக்கிறார்கள். அப்படி கேரக்டரோடு ஒன்றிப்போன நடிப்பைக் கொடுத்துள்ளனர்

கேமராமேன் திரு இந்தவாரப் படங்களின் வின்னர் என அறிவித்து விடலாம். படமெங்கும் கேமரா கதை பேசுகிறது. இளையராஜா ஒரு நாளும் பழையராஜா ஆகமாட்டார் என்பதற்கு இந்த டோரதியும் சாட்சியாக இருப்பாள். சில காட்சிகள் அவரால் மட்டுமே உயிர் பெறுகிறது. முத்துமணி பாடல் வரும் இடம் கிளாஸிக்!

எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி எனும் நாவலில் ஒரு திருநங்கையின் வாழ்வு அவ்வளவு வலியோடு சொல்லப்பட்டிருக்கும். அதைவிட வலிமையாக காட்சியமைப்பில் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஒவ்வொரு கேரக்டர்களுக்கான ரைட்டிங்கிலும் அமேசிங்கான உழைப்பு. மேலும் மேக்கிங்கில் அவர் காட்டியிருக்கும் அக்கறையும் அழகியலும் வியக்க வைக்கிறது. உருவத்தில் ஆணாகவும் உள்ளத்தில் பெண்ணாகவும் உணரும் ஒரு உயிரை மயிறுக்கும் மதிக்காமல் இருந்த ஒரு ஜெனரேசனை நெத்தியில் அடித்து கேள்வி கேட்கிறாள் டோரதி. படம் முடிந்தபின்னும் கடைசி பத்து நிமிடங்களை கமர்சியல் அம்சம் கருதி கட் செய்திருக்கலாம். என்றாலும் படத்தின் கதைக்கு அதுதான் சரியான முடிவு என்பதால் அமைதி கொள்வோம்!

டோரதி- தமிழ்சினிமா வரலாற்றில் என்றென்றும் நின்று பேசும் அசாத்திய சினிமா
4/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *