உடலற்ற மூன்று தலைகளும், அவற்றைப் பற்றிய கதைகளுமே ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள தூள்பேட்டை வெப்சீரிஸின் ஒன்லைன்
தூள்பேட்டை காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் பாடினி குமாரின் கண்களுக்கும், மனதுக்கும் ஒரு இரவிற்குள் மூன்று கொலைகள் நடக்கப் போவதாக தோன்றுகிறது. அவரது கண்களுக்கு அவை காட்சிகளாகவும் தெரிகிறது. தூள்பேட்டை போலீஸ்டேசனுக்கு உதவி கமிஷ்னராக ஹீரோ அஸ்வின் குமார் வந்து ஜாயிண்ட் பண்ணும் நாளில் தான் இவை அனைத்தும் நடக்கிறது. பாடினிகுமாருக்குத் தோன்றியபடியே மூன்று கொலைகளும், கொலையுண்டவர்களின் தலைகளும் காவல்துறைக்கு எட்ட… அஸ்வின் குமார் அதற்கான விசாரணையில் இறங்குகிறார். விசாரணை தீவிரத்தன்மையை எட்டுவதற்குள் மூன்று எபிசோட்கள் முடிந்து நான்காவது எபிசோடிற்கு வெயிட் பண்ண வைத்துள்ளார் இயக்குநர் ஜே. ஜேஸ்வினி.
அசிஸ்டெண்ட் கமிஷ்னர் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் அஸ்வின்குமார். மிடுக்கான தோற்றமும் இயல்பான நடிப்புமாக அஸ்வின் அசத்தியுள்ளார். பாடினிகுமார் கேரக்டருக்குள் ஒரு சீக்ரெட் ஒளிந்திருப்பதாக தெரிகிறது. தனது உடல்மொழியிலும் அதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாடினிகுமார். ஏனைய கேரக்டர்களில் வரும் இன்ஸ்பெக்டர் முதல் எல்லோரும் நச் என கவனம் ஈர்க்கின்றனர். ஐஸ்பேக்டரி ஓனரின் மகளும், அவரின் காதலனாக வரும் இளைஞரும் நல்ல தேர்வு நல்ல நடிப்பு
அஸ்வத் தனது பின்னணி இசை மூலம் சீரிஸை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். மிகையற்ற பின்னணி இசை தேவையான எமோஷ்னலை கச்சிதமாக கன்வே செய்துள்ளது. ஒரு திரில்லர் சீரிஸுக்கான லைட்டிங்-ஐ செட் செய்து மினிமம் பட்ஜெட்டிற்குள் அபாரமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் என்.எஸ் சதீஷ்குமார். ஷார்ப்பான கட்ஸ்களால் கவனம் ஈர்க்கிறார் எடிட்டர் சாம் ஆர்டிஎக்ஸ்.
சீரிஸில் ‘வாட் நெக்ஸ்ட்?’ மொமெண்ட் முதல் மூன்று எபிசோட்களிலும் பக்காவாக அமைந்துள்ளது. ஒரு காட்சி கூட விரயமாக தெரியாதபடி திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் ஜே.ஜேஸ்வினி. மேக்கிங்கிலும் நல்ல மெச்சூட் தன்மை இருப்பதை காண முடிகிறது. அஸ்வின் குமார் கேரக்டருக்கான பின்கதையில் நிறைய கேள்விகளை வைத்து Full கதைக்காக வெயிட் பண்ண வைத்துள்ளார் ஜேஜே. ஒவ்வொரு கொலைக்கான காரணங்களையும் ஒரே புள்ளிக்குள் எப்படி கொண்டுவரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்ததில் தூள்பேட்டை தூள் கிளப்பியுள்ளது!
மூன்று எபிசோட்ஸ் பார்த்து முடித்ததும் தோன்றியது ஒன்றே ஒன்று தான்…
“நாலாவது எபிசோட் எப்ப பாஸ்?”
3.5/5
-வெண்பா தமிழ்

