ஒரு சாதா டிரைவரும், இரு தாதா கேங்கும் க்ளாஸ் ஆகும் கதையே தாவூத்
மும்பையில் பெரிய டான்-ஆக இருக்கும் தாவூத்திற்காக சென்னையில் இருவர் ஸ்மக்லிங் கடத்தல் செய்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு தனிப் பஞ்சாயத்தும் ஓடுகிறது. சென்னையில் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தும் ஹோலோ டிரைவர் ஹீரோ லிங்கா. இந்த ஸ்மக்லிங் கும்பலுக்குள் அவர் சிக்குகிறார். அதன்பின் என்னென்ன நடக்கிறது என்பதே தாவூத்தின் மீதிக்கதை
கதையின் நாயகனாக லிங்கா கனகச்சிதமாக நடித்துள்ளார். அப்பாவி டிரைவராக பயம் நிறைந்த கண்களுடன் அவர் நடித்துள்ளது நிச்சயமாக சிறப்பு. மேலும் படத்தில் அவர் கேரக்டரிலுள்ள ட்விஸ்ட் வெளிவரும் போதும் அசத்தியுள்ளார். நாயகி சாரா ஆர்ச்சரை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம். டேனி என்ற அவரின் பெயரிலுள்ள குறியீடு சிரிப்பு ரகம்! ஜானி சின்ஸ் பெயரில் வரும் நடிகரும் நல்ல தேர்வு. சாய் தீனா, ராதாரவி உள்ளிட்ட இன்னும் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட கேரக்டர்களை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளனர்
இசை அமைப்பாளர் ராகேஷ் அம்பிகாபதி நல்ல இசையை கொடுத்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்கும் கனித்தனி பின்னணி இசை கொடுத்திருப்பதில் தெரிகிறது அவரது சின்ஸியர். ஒளிப்பதிவாளர் தனது பணியை அழகாகச் செய்துள்ளார். எடிட்டரும் ஷார்ப்பாக கட்ஸ் கொடுத்துள்ளார்
பிரபலமான முன்னணி நடிகர்களுக்கான கதையை வைத்து துணிச்சலாக களமாடியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் ராமன். படத்தின் வில்லன் கேரக்டர் பெயரை டைட்டிலாக வைத்ததிலிருந்து நிறைய வித்தியாசங்களை காட்டி கவனிக்க வைத்துள்ளார். முன்பாதியிலுள்ள நேர்த்தி பின்பாதியில் சற்று சறுக்கியிருந்தாலும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தை காப்பாற்றுகிறது. இந்த வாரத்தில் ஒரு டீசன்ட் வாட்ச் கேட்டகிரியில் இந்த தாவூத்-ஐ வைக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

