தியேட்டர் Fulling மெட்டிரியல் படங்களில் பேய்ப்படங்களும் அடங்கும். இந்த டார்க் ஜெயண்ட் தியேட்டர்களை Full ஆக்குதா.. டல் ஆக்குதா?
திருமணம் முடித்து பணக்கஷ்டத்திலுள்ள ஒரு ஜோடி பூர்விக சொத்தை விற்பதற்காக ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கு சொத்தைப் பிரித்துக்கொடுக்க வேண்டிய தாத்தா நோய்மையில் கிடக்கிறார். அந்த தாத்தாவின் பிரம்மாண்ட வீட்டிலே அந்த ஜோடி தங்குகிறது. அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் சோனியா அகர்வாலின் பெருங்கதை இருக்கிறது! அது என்ன என்பதை நோக்கி திரைக்கதை விரிகிறது
சோனியா அகர்வால் கொடுத்த வேலைக்கு குறைவின்றி நடித்துள்ளார். கெஸ்ட் போன்று வரும் பாக்கியராஜ் தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். அவரது ட்ரேட்மார்க் வாய்ஸ்தான் சற்று டல்லடிக்கிறது. அருவி மதன் பதற வைக்கும் கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். ஜோவிதா லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன், அமுதவாணன், ரபிக் உள்ளிட்ட இதர கேரக்டர்களும் ஒகேவாக நடித்துள்ளனர்.
சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவைச் செய்துள்ளார். பட்ஜெட் பிரச்சனை இருந்தாலும் தனது இருப்பை பல நல்ல ஷாட்கள் மூலம் நிரூபித்துள்ளார். விக்னேஷ் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை
KS.கிஷான் தனது கதை சொல்லலில் ஒரே டெம்ப்ளேட்டை பயன்படுத்தியிருப்பது சற்று நெருடல். திரைக்கதையில் இன்னும் இன்ட்ரெஸ்டிங் பேக்டரைச் சேர்த்திருக்கலாம். மேக்கிங் அவருக்கு நன்றாக வந்துள்ளது. சில காட்சிகள் நிஜமாகவெ பயமுறுத்துகின்றன
இருந்தாலும் கதையின் அடிப்படையில் எந்தப் புதுமையுமில்லை என்பதால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
இருப்பினும் மூட நம்பிக்கையை முச்சந்தியில் வைத்து அடிக்க வேண்டும் என்ற பகுத்தறிவைப் போதிப்பதால் டார்க் ஜெயிண்ட்-க்கு பாஸ்மார்க் கொடுப்போம்
3/5
-வெண்பா தமிழ்

