கணத்திற்கு கணம் வாழ்வது தான் வாழ்க்கை. கடந்து போனதை நினைத்தோ, வரப்போவதை எண்ணியோ வாழ்வதல்ல வாழ்க்கை என்பதைச் சொல்கிறது பன் பட்டர் ஜாம்
கல்லூரி மாணவர் ராஜுக்கு உடன் படிக்கும் பவ்யா மீது காதல். பவ்யாவும் ராஜுவை காதலிக்கிறார். இச்சூழலில் ராஜுவின் உயிர் நண்பனான மைக்கேல் பவ்யாவை காதலிக்கிறார். (எங்கேயோ இடிக்குதுல்ல? இடிக்காது படம் பாருங்க) இன்னொரு நாயகி ஆதியா பப்புவை காதலிக்கிறார். But பப்பு என்ன செய்தார்? ஹீரோவின் காதல் என்னானது என்பதே படத்தின் திரைக்கதை
கதாநாயகனாக ராஜு ஜெயமோகனுக்கு இது முதல் படம். ஆனால் அந்தத் தடம் தெரியாமல் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். பவ்யா ஸாரி சொல்லும் ஒரு இடத்தில் அவரை விட்டு விலகும் ஒரு ஷாட்டில் முழு ஹீரோவாக மாறுகிறார் ராஜு. மைக்கேல் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை முழுமையாக உள்வாங்கி அசத்தியுள்ளார். இரு நாயகிகளில் பவ்யா ஒரு ரகம் என்றால் ஆதியா தனி ரகம். இருவருமே சரியாகப் பொருந்தியுள்ளனர். இவர்களுக்கு இணையாக சரண்யா பொன்வண்ணன் தேவதர்ஷினி இருவரும் வேறலெவல் சம்பவம் செய்துள்ளனர். விஜே பப்பு இந்தப் படம் மூலம் தனது கரியரில் சிறப்பான இடத்தைத் தொடுவார். அவரின் ப்ளம்பர் காமெடி அல்டி ரகம். சார்லி உள்ளிட்ட இயக்குநர் ராகவ் தேர்ந்தெடுத்துள்ள அத்தனை நடிகர்களும் கதைக்குச் சாலப்பொருத்தம். கேமியோவில் வரும் விக்ராந்த் வசீகரிக்கிறார்
படத்தில் இத்தனை கதாப்பாத்திரங்களின் மன உணர்வுகளை இசை வழியே நமக்குள் கடத்தி மெஸ்மரிசம் செய்கிறார் இசைஞர் நிவாஸ்.கே பிரசன்னா. நிவாஸ் குரலில் ஒலிக்கும் பாடல்களும் ரிப்பீட் மோட். இந்தாண்டு எனர்ஜிடிக் இசை விருதை நிவாஸுக்கு எடுத்து வைக்கலாம். ஒளிப்பதிவாளர் பாபுகுமார் மிகச்சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார்
காதல் தான் கான்செப்ட் என்பதால் இயக்குநர் ராகவ் மிர்தாத் புகுந்து விளையாடியுள்ளார். தலைமுறை ஷிப்டிங்-ஐ மனதில் வைத்து இன்றைய ஜென்Z ஜெனரேசனை மனதில் வைத்து மேக்கிங்கில் அசத்தியுள்ளார். காதலில் ப்ளேமிங் என்ற விசயம் காலங்காலமாக இருந்து வரும் ஒன்று. இந்தப்படத்தில் அதைத்தொடவே இல்லை. மெச்சூட் ரைட்டிங் என்பதற்கு இது ஒரு சான்று. மனிதர்களின் மனங்கள் மாறக்கூடிய ஒன்று. கலாச்சாரம் கருதி சில மனங்கள் அதை வெளிப்படுத்துவதில்லை. இன்றைய இளைஞர்கள் அப்படி அல்ல என்பதை திரைவெளியில் மனம் நிறையும் படி காட்டியுள்ளார் இயக்குநர். நிச்சயமாக ஹிட் மெட்டிரியலாக படம் வந்துள்ளது. சிலபல பூமர்ஸ் கமெண்ட்ஸ்களை இக்னோர் செய்துவிட்டு தியேட்டருக்கு நம்பிச் செல்லுங்கள்
3.75/5
-வெண்பா தமிழ்

