சசி வரைந்துள்ள காதல் ஓவியம் இந்த நூறுகோடி வானவில்
ஹீரோ ஹரிஷ் கல்யாண் கோவாவில் நாயகி சித்தி இத்னானியைப் பார்க்கிறார். பார்த்ததும் காதல் வரவில்லை. அவர் நடத்தும் ஷோவிற்கு ஒரு ஐடியா வருகிறது. அதை சித்தி இத்னானியை வைத்தே செயல்படுத்த நினைக்கிறார். ஆனால் சித்தி இத்னானி கோமாவில் இருக்கும் தன் காதலனுக்கு அது பிடிக்காது என மறுக்கிறார். சுருக்கி வைத்துள்ள அவரது ஆசைகளை பறக்க வைக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர்களின் இந்த பயணம் காதலாக மாறியதா? முதல் காதலனை சித்தி இத்னானி எப்படி ஹேண்டில் செய்தார் என்பது படத்தின் மீதிக்கதை
ஹரிஷ் கல்யாண் இந்த வேடத்திற்கு 100% பொருத்தமாக இருக்கிறார். சித்தி இத்னானி அழகா கோவா அழகா என பிரிக்க முடியவில்லை. நடிப்பிலும் அசத்தியுள்ளார் சித்தி! மேலும் கோவை சரளா, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, விஜே.பார்வதி உள்ளிட்ட சிலர் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்
சித்துக்குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் தனது பணியை மிகச்சிறப்பாக செய்துள்ளார். படத்தின் டைட்டிலிலுள்ள பேரழகை விஷுவலிலும் கொண்டு வந்துள்ளார்
இயக்குநர் சசி மென் உணர்வுகளை கச்சிதமாக நமக்குள் கடத்துவார். இந்தப்படத்தில் அது ஆங்காங்கே மிஸ் ஆகிறது. கதையாக மூன்று கேரக்டர்களுக்குள் நல்ல சிக்கலை ஏற்படுத்திய சசி, அதை திரைக்கதையாக்கும் போது பெரிய சுவாரஸ்யத்தை கூட்டவில்லை
2.5/5
-வெண்பா தமிழ்

