ஒரு ரொமாண்டிக் திரில்லர் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் L.சண்முக சுந்தர். அவரின் முயற்சி வென்றதா?
கல்லூரியில் படிக்கும் இளைஞர்களில் முதன்மை கேரக்டரில் வரும் இளைஞனுக்கு ஒரு விநோத சக்தி இருக்கிறது. அவர் யாரையாவது போட்டோ அல்லது வீடியோவில் பார்த்தால், அப்படியே அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை விஷுவலாக பார்த்து விடுவார். பாசிட்டிவ் விஷுவல், நெகட்டிவ் விஷுவல் இரண்டுமே அவருக்குத் தெரிந்துவிடும். அப்படியான அந்த இளைஞனின் தோழி ஒருவர் மரணமடைந்து விடுகிறார். அதற்கான காரணம் அலசப்படுகிறது. அதற்கான தீர்வை அந்த இளைஞனின் விநோத சக்தி கொடுத்ததா? என்பதாக படத்தின் கதை பயணிக்கிறது. கூடவே சில கிளைக்கதைகளும் படத்தில் உண்டு
இந்தப்படத்தில் நடித்துள்ள எல்லோருமே நமக்குப் பரிச்சயமில்லாத முகங்கள் தான். ஆனால் எல்லோரும் எதார்த்தமாக நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். யாமினி லக்ஷ்மனன், பிரேமா கன்னா, ஆச்சர்யா, அருண்மோகன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜுஹி ஷர்மா உள்ளிட்ட படத்தில் வரும் எல்லா நடிகர்களும் பக்கா மார்க் வாங்குகிறார்கள்
கிடைத்த சின்ன பட்ஜெட்டில் நல்ல லைட்டிங்-ஐ செட் செய்து ஓரளவு டீசன்டான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் பிரதீப் பத்மா. பிரசாந்த் விஹாரி பின்னணி இசையிலும் பாடல்களிலும் இன்னுமே கவனம் செலுத்தியிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை
இயக்குநர் படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்லைனைத் தான் செலக்ட் செய்துள்ளார். அதை வலிமையான திரைக்கதையாக்கத் தவறியுள்ளார். இன்னும் ரைட்டிங் லெவலில் மிரட்டியிருக்கலாம். முன்பாதி சற்று டல்லடித்தாலும் பின்பாதியில் படம் ஒரு பரபரப்பை கிரியேட் செய்து நம்மை உற்சாகமாக்கி விடுகிறது
பீப்-Safe
2.75/5
-வெண்பா தமிழ்

