பேரிஸ் கஃபே- விமர்சனம்

Made for each other என்று சொல்லும் ஜோடிக்குள் நிகழும் உறவும் பிரிவும் தான் கதை.

மருத்துவரான குரு சோமசுந்தரம் மனைவி அனுமோல் மீது பெரும்பாசம் கொண்டவர். சமூகநலனுக்காக குரல் கொடுக்கும் அனுமோலும் கணவன் மீது பாசம் கொண்டவர் தான். குரு சோமசுந்தரம் சூழ்நிலை அழுத்தம் காரணமாக ஒரு காதல் ஜோடியின் கொலையை தற்கொலை என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்து விடுகிறார். அதில் கோபப்படும் அனுமோல் கணவரை விட்டுப் பிரிகிறார். இவர்களைச் சேர்த்து வைப்பதற்காக மகள் அர்ச்சனா அவரின் காதலன் விஜய் விஷ்வா இருவரும் வருகிறார்கள். பெரிய ஜோடியை சின்ன ஜோடி சேர்த்து வைத்ததா? அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ரீ ஓப்பன் ஆகி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதே படத்தின் மீதிக்கதை

குருசோமசுந்தரம் காதல் நிறைந்த கணவனாகவும், பொறுப்புள்ள தந்தையாகவும் மனதில் நிற்கிறார். குற்றவுணர்ச்சியை சுமக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அனுமோல் பெரியார் அம்பேத்கர் வழிமொழிந்த பெண்ணாக நடித்து கவனம் ஈர்க்கிறார். விஜய் விஷ்வா ஒரு சப்போர்ட்டிங் ஹீரோவாக அசத்துகிறார். அர்ச்சனா கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடி இயல்பாக நடித்துள்ளனர்

சதிஷ் G டீசன்டான ஒளிப்பதிவைச் செய்துள்ளார். இசையமைப்பாளர் கே மென்மையான காட்சிகளுக்கும், திரில்லிங் காட்சிகளுக்குமான வித்தியாச இசையை கச்சிதமாக இசைத்துள்ளார்

இயக்குநர் சராஜ் சீலன் ஒரு சோசியல் கன்டென்ட்-ஐ கையிலெடுத்துள்ளார். அந்தக் கன்டென்டில் கொஞ்சம் கமர்சியல் சேர்த்து ஓரளவு இன்ட்ரெஸ்டிங்காகவே கதை நகர்கிறது. எமோஷ்னல் ஏரியாவில் இன்னும் கொஞ்சம் தரமாக வேலை செய்திருக்கலாம். சிற்சில காட்சிகளில் மேக்கிங்-ஐ இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். மெயின் கதைக்கு காரணமான கிளைக்கதையில் நாடகத்தனம் தெரிவதையும் தவிர்த்திருக்கலாம். குட்டி குட்டி சமூக அக்கறை, குருசோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா ஆகியோரின் கெமிஸ்ட்ரி ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது
3/5
-வெண்ப தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *