ஒரு தடவியல் நிபுணரின் துப்பறிவே படத்தின் ஒன்லைன்
ஒரு விபத்தில் பெற்றோரை பறிகொடுக்கும் பாவானா மிஞ்சிய தம்பியை நல்லபடியாக பார்த்து வருகிறார். தடவியல் நிபுணராக இருக்கும் பாவனாவிற்கு அடுத்த அதிர்ச்சியாக அவர் தம்பியின் மரணமும் நிகழ்கிறது. அதற்கு முன் தம்பி வயதை உள்ள ஒருவரும் இறக்க, இதற்குள் ஒரு க்ரைம் இருப்பதாக பாவனா நம்புகிறார். போலீஸ் இன்வெஸ்டிகேசன் ஒருபுறம் நடந்தாலும், பாவனா தனியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கத் துவங்குகிறார். முடிவில் அவரது முயற்சி நல்ல முடிவை எட்டியதா என்பதே கதை
பாவனாவின் பாவனைகளே நமக்கு அவர் பேச நினைக்கும் வசனங்களை புரிய வைத்துவிடுகிறது. அவ்வளவு அற்புதமான நடிப்பை பாவனா வழங்கியுள்ளார். ரஹ்மான் நல்ல நடிப்பைக் கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ஷெபின் பென்சன் தான் ஏற்றுள்ள கேரக்டரின் ஆழம் உணர்ந்து நடித்துள்ளார். பிலிப், விஷ்ணு அகஸ்தியா உள்பட பிற கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர்
ஹர்ஷவரதன் ராமேஸ்வர் தரமான இசையை வழங்கியுள்ளார். ஒரு திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படத்திற்கான இசை அசத்தல். சுஜித்சாரங் தேர்ந்த லைட்டிங்-ஐ செட் செய்து சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். காட்சிகளின் மூட்-ஐ ப்ரேமிங் மூலம் நமக்கு புரிய வைத்துள்ளார்
ஒரு நல்ல திரில்லர் ஸ்கிரிப்டை அழகான திரைக்கதையாக்கி நம்மை ரசிக்க வைக்கிறார் இயக்குநர் ரியாஸ் மராத். குட்டி குட்டி ஐடியாக்கள் எல்லாம் தரம். பாவனா ரொம்பச் சின்னச் சின்ன தடயங்களை வைத்தே குற்றவாளியை நெருங்குவது அல்டிமேட் ரகம். சிலபல குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல காட்சியனுபவம் இந்த அனோமி
3.25/5
-வெண்பா தமிழ்

