அமரம்- விமர்சனம்

அமரம் என்ற வார்த்தைக்கு படகு, தோணி, போர் என பல பொருள் உண்டு. இந்தப்படத்திற்கு போர் என்பதைக் குறித்தே இந்த டைட்டிலை செலக்ட் செய்திருப்பார்கள் என நம்பலாம்

கூலிக்கு கொலை செய்வதை தொழிலாக கொண்டிருக்கிறார் ஹீரோ ராஜன் தேஜஸ்வர். இவரின் கொலைச்செயலால் தந்தையை இழந்த நாயகி ஐரா அகர்வால் இவரை பழி வாங்க வருகிறார். ஆனால் அதன்பின் பல ட்விஸ்ட் வருகிறது. அந்த ட்விஸ்ட்கள் தான் படத்தின் மீதி திரைக்கதை

ராஜன் தேஜஸ்வர் சிகை கூட்டி கெட்டப்பில் ஈர்க்கிறார். மிகையில்லா நடிப்பிற்கு நிச்சயமாக அவர் பயிற்சி பெறுவார் வரும்காலங்களில். ஐரா அகர்வால் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். ஜார்ஜ் மரியன், சாய் தீனா உள்ளிட்ட கேரக்டர்களும் சிறப்பு செய்துள்ளனர்

மிக்கி ஜெ. மேயர் இசை சூப்பருமில்லை. சுமாருமில்லை. பரத்குமார் டீசண்டான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்

கதையில் பேசப்பட்டுள்ள பொலிட்டிகல் மிக முக்கியமானது. மலைவாழ் மக்களை கூலிப்படையாக மாற்றும் அரசியல் வியாதிகளை விமர்சித்துள்ளார் இயக்குநர் திரு அருள் கிருஷ்ணா. திரைக்கதையில் இன்னும் ஆழம் சேர்த்திருக்கலாம்.

அமரம்- பாடம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *