மிகவும் ஹெவியான கதையோடு களம் இறங்கியிருக்கிறது இந்தக் கெவி
மலைவாழ் மக்கள் வாழும் கிராமம் கெவி. இது கொடைக்கானல் செல்லும் மலையில் உள்ளது. இங்கு வாழும் மக்களில் நாயகன் ஆதவனும் நாயகி ஷீலாவும் இருக்கிறார்கள். எந்த மருத்துவ வசதியுமற்ற அந்தக் கிராமத்தை அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவே இல்லை. இச்சூழலில் பிரசவ வலியில் துடிக்கிறார் ஷீலா. அவரைத் தோடிகட்டி கொண்டு செல்கிறார்கள் மக்கள். ஷீலாவின் கணவரான ஆதவனை போலீஸ் கொலை செய்ய முயற்சிக்கிறது. முடிவு என்ன என்பதே மீதிக்கதை
கதையின் நாயகியாக ஷீலா தனது அபாரமான நடிப்பால் துவம்சம் செய்துள்ளார். அவரின் கதறல் ஒலி படம் முடிந்த பின்னும் நம் காதுகளை விட்டு நகரவில்லை. நாயகன் ஆதவன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரின் எதார்த்தமான பெர்பாமன்ஸ் படத்திற்கு பலம். ஜாக்குலின்,சார்லஸ் வினோத் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்
பாலசுப்பிரமணியன் ஜி மற்றும் சா.ராஜாரவிவர்மா இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே கதை சொல்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா மலை கிராமத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளார்
ஒரு மலை கிராமத்தின் முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்துப்பேசியுள்ளார் இயக்குநர் தமிழ் தயாளன். முழு சினிமாவாக கூடி வருவதற்கு இன்னும் சில வேலைகளை இயக்குநர் செய்திருக்கலாம். இருந்தாலும் மக்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் அலட்சிய அதிகாரத்தைத் தோலுரிக்கும் இப்படியான படம் அவசியம். அதனால் கெவியை வரவேற்போம்
3.25/5
-வெண்பா தமிழ்

