ஒரு மலையடிவாரத்தில் எந்த அடையாளமும் இல்லாத ஒருவன் தேசத்தின் அடையாளமாக மாறும் கதை
1990-களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆட்டக்கூலியைப் பெற்றுக்கொண்டு யாருக்காக வேண்டுமானாலும் விளையாடும் வீரர் ராம்சரண். ரெயில் வசதி உள்ளிட்ட எந்தப் போக்குவரத்து வசதியிமில்லாத மலையடிவாரத்தில் வாழும் அவரும் அவரின் மக்களும் வஞ்சிக்கப்படுவதை ஒருமுறை உணர்கிறார் ராம்சரண். உடனே தனக்கு ஒரு அடையாளம் தேவை என உணர்ந்து சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்றுக்கொள்கிறார். அதில் சாதனையை நிகழ்த்தும் போது ஒரு அசம்பாவிதம் அவருக்கு நேர்கிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது படத்தின் மோட்டிவேட் திரைக்கதை
இந்தப்படத்திற்காக தன் உடலை அசுரத்தனமாக வருத்தி யுள்ளார் ராம்சரண். ஒரு பெருவீரனுக்கான எல்லா மிடுப்போடும் திரையில் தோன்றுகிறார். அதிரடிச் சண்டைக்காட்சிகளில் நம்பும்விதமாக சுற்றிச்சுழல்கிறார். நாயகி ஜான்விக்கு கிளாமர் காட்டும் வேலை மட்டும் தான். ஒரு காட்சி மட்டும் அவருக்கு எமோஷ்னலாக வொர்க் ஆகியுள்ளது. சிவராஜ்குமார் ஒரு நல்ல கோச்-ஆக கவனம் ஈர்க்கிறார். ஜெகபதிபாபு உயிரோட்டமுள்ள ஒரு கேரக்டரில் நடித்து ஸ்கோர் செய்துள்ளார்
ஏ.ஆர் ரகுமான் சில இடங்களில் அதிகமாகவும், பல இடங்களில் மிகச்சரியாகவும் இசைத்துள்ளார். ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தின் மிக முக்கியமான பாசிட்டிவ் அம்சம். சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா அனல் பரத்தியுள்ளது
கதையாக நல்ல ஒரு மோட்டிவேட் லைனை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் புஜ்ஜிபாபு சனா. பல மாஸ் காட்சிகளை மெனக்கெட்டு எழுதி ராம்சரண் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு ஆகச்சிறந்த திரைக்கதையாக பெத்தி உருமாறவில்லை. மூன்றுமணி நேரத்திற்கும் மேலான படத்தின் நீளமும் நம் பொறுமையைச் சோதிக்கிறது. இருப்பினும் திறமையாளனை சாதி பார்த்து ஒதுக்கும் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் இயக்குநர். அதற்காக பெத்தியை கட்டியணைக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

