கொலையுதிர் காலம்- நூல் விமர்சனம்

தலைவன் சுஜாதாவை வாசித்து சில வருடங்கள் ஆயிற்று. சமீபத்தில் என் பள்ளி நண்பன் செல்வா இந்த நூலை பரிசளித்தான். சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்தாலும், இப்போது இந்தக் கதை கனெக்ட் ஆகுமா என செக் பண்ண வாசித்தேன். துளி கூட இன்ட்ரெஸ்டிங் குறையவில்லை.

17 வயது நிரம்பிய லீனாவிற்கு சேர வேண்டிய சொத்துக்களில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என கிராஸ் செக் செய்ய வருகிறார்கள் லாயர்களான கணேஷும் வசந்தும். சித்தாப்பாவின் துணையோடு வாழும் லீனாவிற்கு ஆபத்து இருப்பதை கணேஷும் வசந்தும் அறிகிறார்கள். அந்த ஆபத்து அறியில் துணையோடு வருகிறதா.. ஆவிகளின் துணையோடு வருகிறதா என்ற டிஸ்கசனோடு மெயின் கதை படபடவென பட்டாசாக பறக்கிறது.

“கணேஷ் வசந்த்..Hi, hello உங்களைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு?” என்று Feel பண்ண வைக்குமளவு இப்பவும் மனதுக்கு நெருக்கமாகிறது அந்த கேரக்டர்கள். ஒவ்வொரு எபிசோடிலும் ட்விஸ்ட் வைத்து, கிளைமாக்ஸ் வரை லீட் வச்சு வழக்கம் போல நாவலை திரைக்கதையாகவே எழுதியிருக்கிறார் தலைவன் சுஜாதா. எனக்கு வசந்த் கேரக்டர்மீது பெரிய பிடித்தம் உண்டு. ஹாலிவுட் படங்களில் இப்படியான கேரக்டர்களைப் பார்க்க முடியும். சீரியசான ஒரு மேட்டர் போகும்போது இந்தக் கேரக்டர் கேசுவலாக ஒரு காமெடியோ ஏ கதையோ சொல்லும். அது மனதை ரிலாக்ஸ் செய்யும். இதிலும் வசந்தின் குறும்புத்தனம் உண்டு.
ஒரு முக்கியமான இன்வெஸ்டிகேஷன் நடக்கும் போது லீனாவிடம் வசந்த் ஒரு கதை சொல்வான், இதான் அது…

/ஒரு அப்பாவும் அம்மாவும் விச்சுவும் காஷ்மீர் போனாங்களாம். அம்மா அப்பாகிட்ட, “என்னங்க நாம தேனிலவுக்கு இங்கதானே வந்தோம்? ஞாபகம் இருக்குங்களா” ன்னு கேட்டாளாம். விச்சு அதைக்கேட்டுட்டு “அப்ப நான் உங்ககூட வந்தனாப்பா” ன்னு கேட்டானாம். அதுக்கு அப்பா, “ஆமாண்டா கண்ணு. போறப்ப என்கூட வந்தே, வரப்ப அம்மா கூட வந்தே”ன்னாராம்”/

நாவல் So cute😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *