ப்ளம் கேக்- நூல் விமர்சனம்

அடர்ந்த இரவில் மலை மீது அமர்ந்து மேகங்களை காணும் போது,.மேகங்கள் கேக் வடிவமெடுத்து கிறிஸ்துமஸுக்கு தயார் ஆகிறது. ப்ளம் கேக் கவிதையில் இப்படியொரு காட்சி. ஒரு வரிக்குள் ஒரு காட்சி என நிறைய கவிதைகள் காட்சிகளின் அடர்த்தியைக் கொண்டிருந்தன

/அதே கோவில்

கருவறை முன்பு நின்றோம்
முன்பு போல் எதையும் வேண்டிக்கொள்ள வில்லை

விலகி வருகிறோம்
ஆனாலும் இருக்கிறோம் பிரகாரத்தினுள்

நீயொரு தூணிலும்
நானொரு தூணிலும்
சாய்ந்தபடி அமர்ந்தோம்

அமைதியாக இருக்கிறது/

இப்போதெல்லாம் நாம் காதலைச் சொல்லிக்கொள்வதில்லை என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதை ஒரு இரவின் உறக்கத்தை தனதாக்கிக்கொண்டது

/மலர் மலர்ந்து அறிகிறது
தனக்குள் இருந்தது வானமென/ Love it

நல்ல நல்ல சொல்லாட்சி கொண்ட ப்ளம்கேக் நல்ல வாசிப்பனுவத்தை தரும்

இதுவும் செந்தில் ஜெகன் நாதன் பரிந்துரைத்த நூல் தான்😎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *