உள்ளங்கையில் ஆகாயம் இருக்கையில் இனி ஒளிவுமறைவுக்கு வாய்ப்பு கம்மி. அதனால் உஷாரா இருக்கணும் என்ற மெசெஜை சொல்கிறார் முஸ்தபா முஸ்தபா
சதிஷ் திருமணத்திற்கு தயாராகிறார். அச்சூழலில் மற்றொரு பெண்ணுடன் அவரிருந்த அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிடுகிறது. அந்த வீடியோவை தான் மணமுடிக்கப் போகும் பெண் பார்க்குமுன் நீக்கிவிட போராடுகிறார். அதற்காக ஹேக்கர் ஒருவரை நாடுகிறார். அவரால் நீக்க முடிந்ததா என்பதை சற்று நீட்டி முழக்கிச் சொல்லியுள்ளார் இயக்குநர் பிரவீன் சரவணன்.
நாயகனாக சதீஷ் கவனம் ஈர்க்கும்படியே நடித்துள்ளார். சில டான்ஸ் ஸ்டெப்களில் கூட தேறிவருகிறார். எமோஷ்னல் தான் கொஞ்சம் மிஸ்ஸிங். மோனிகா சின்னகொட்லா ஓரளவு ஒப்பேற்றி விடுகிறார். சதீஷிடம் அவர் காட்டும் அன்பும் வெறுப்பும் ஒகே ரகம். ஐஸ்வர்யா தத்தா, புகழ், மானஸா செளத்ரி, சுரேஷ் ரவி உள்பட பலரும் இயல்பாக நடித்துள்ளனர். கருணாகரன் வழக்கம் போல் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்.
எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் ஓரளவு ஸ்கோர் செய்துள்ளார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ நல்ல விஷுவலை கொடுத்துள்ளார். படத்தில் சில காட்சிகள் கிராண்டியராக படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஐடியா இன்ட்ரெஸ்டிங்காக இருந்தாலும் ஸ்கிரீன்ப்ளே இன்னும் பெப்பியாக இருந்திருக்கலாம். படத்தில் நட்பு வினையாகவும் துணையாகவும் உண்டு என்ற வித்தியாசத்தைக் காட்டியிருப்பது சிறப்பு. கடைசியாக சொல்லப்படும் அறிவுரையும் ஒகே தான்.
3/5
-வெண்பா தமிழ்

