தொலையாத காதலும் தொலைந்த காதலியும் என ஒன்லைனில் சொல்லும் படத்தில் வேறோர் கதையும் இருக்கு
கல்லூரி மாணவரான ஹீரோ ஆதவ் கிருஷ்ணா படிப்பில் பக்கா பையன். அவரின் நல்ல குணங்கள் கண்டு ஹீரோயின் சிம்ரனுக்கு அவர் மீது காதல் பூக்கிறது. பூக்கும் காதல் அப்படியே போட்டுத்தாக்க இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். காதலியின் அம்மா அவரது கணவனை விட்டுத் தனித்திருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஹீரோயின் செல்ல, ஹீரோவும் பின் தொடர்கிறார். வந்த இடத்தில் ஹீரோயின் தொலைந்து போகிறார். ஹீரோ தேடியலைகிறார். ஹீரோயின் தொலைந்ததிற்குப் பின்னாலுள்ள கதை என்ன என்பது படத்தின் மீதிக்கதை
அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா இன்னும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கலாம். ஒருசில காட்சிகளில் மட்டும் சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின் சிம்ரன் ஓரளவு நல்ல நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார். ஹீரோவின் அம்மாவாக வரும் வினோதினி வழக்கம் போல் தனது இருப்பை ஸ்ட்ராங்காக பதிவு செய்துள்ளார். ஜாவா சுந்தரேசனை இன்னும் நன்றாக யூஸ் பண்ணியிருக்கலாம். ஏனைய கேரக்டர்கள் பலரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்
இசையமைப்பாளர் பாடல்களில் ஓரளவு பரவாயில்லை. பின்னணி இசையை இன்னும் அழுத்தமாக அமைத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் காசியில் நடக்கும் காட்சிகளை இயல்பாக படம் பிடித்துள்ளார். எடிட்டர் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்
ஜாலியான காதல் கதையாக துவங்கும் படத்தை பின்பாதியில் இன்வெஸ்டிங்கேசன் திரில்லர் போல் நகர்த்தியுள்ளார் இயக்குநர். ஆனால் பின்பாதியில் வரும் குடும்ப வில்லன்களின் நடிப்பும், படத்தின் மேக்கிங்கும் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்றாலும் மோசமில்லை. கதையாக தான் எடுத்துக்கொண்ட கான்செப்டில் தெளிவாக பயணித்துள்ளார் இயக்குநர். கடைசியில் காதல் வென்று நிற்பதில் உள்ளபடியே உள்ளத்திற்கு குட்டியூண்டு எனர்ஜி கிடைக்கிறது. ஓவர்-ஆல் படத்தை இன்னும் பெட்டர்மெண்ட் பண்ணியிருக்கலாம் தான். இருந்தாலும் கதையின் பாடுபொருள் காதல் என்பதால் நாம் லவ்வோடு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்வோம்ம்
2.75/5
-வெண்பா தமிழ்

