ஸ்வீட்டி நாட்டி கிரேசி- 18+ விமர்சனம்

சில கதைகளைச் சொன்னா புரியாது. சில கதைகளைச் சொல்லவே கூடாது. ஆனாலும் கூடாத சமாச்சாரங்களை எல்லாம் கூட வைத்து கும்மி அடித்துள்ளார் இயக்குநர் ராஜசேகர்

இந்தப்படத்தின் வசனங்களை பேனாவைப் பிடித்து தான் எழுதினாரா என்ற சந்தேகம் பக்கத்தில் இருந்து படம் பார்த்தவருக்கும், பக்கத்து இருக்கைக் காரருக்குமே இருந்தது

அப்படியென்ன பாஸ் கதை?
சதைகளே கதைகளாகும் போது விளக்கம் எதற்கு? இருந்தாலும் லைட்டா கதையைச் சொல்வோம்

ஹீரோ த்ரிகுண் பெயருக்கேற்றாப் போலவே மூன்று பேரை கில்மா பண்ணுகிறார். அதனால அவரின் புனிதமற்ற காதல் புட்டுக்கொள்கிறது. அதனாலென்ன என மீண்டும் காமமரம் ஏறி ஒரு பெண்ணை உசார் செய்து கல்யாணம் செய்கிறார். அந்தக் கல்யாணம் செய்த காதலியின் அம்மாவும் அக்காவும் ஏற்கெனவே ஹீரோவிடம் பக்கா டீலை முடித்தவர்கள் என தெரிய வர, கதை மூடு பிடிக்கிறது. இனி எதை மூடி வைக்கிறது என அனைத்தையும் ஓப்பனாக பேசி விடுகிறார் இயக்குநர். இனி இந்த கில்மா கதையின் முடிவு எப்படி இருந்தால் என்ன.. காட்டுன வரைக்கும் கம்பெனிக்கு லாபம்

த்ரிகுண் நடிகராக பக்கா பாஸ்மார்க் வாங்குகிறார். எம்மாங் குத்தாக இருந்தாலும் அது கும்மாங்குத்தாக இருக்க வேண்டும் என்ற அவரது முடிவில் ஒரு காமசூத்ர தீர்க்கம் தெரிகிறது. ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, ராதா என மூவரணி ஆடை அணிகலனை மறந்தே திரிவது வரமா சாபமா என்றே தெரியவில்லை. தம்பி ராமையா அவ்வப்போது தம்பி தம்பி எனப் பேசும் நடிகர். இந்தப் படத்தில் தம்பியை வேறுமாதிரி டீல் செய்கிறார். சத்யனும் நல்ல காம்போ

அருணகிரியின் இசை ஆறுதல். ஒளிப்பதிவாளர் விஜய் ஸ்ரீ இனியாவின் இடையைச் சுற்றியே வலம் வந்துள்ளார்

காமக்கதைகள் என்பது இயல்பான ஒன்று. தேவையான ஒன்றும் கூட. ஆனால் இந்தப்படத்தில் நமது கலாச்சாரத்தையும் பெண்களையும் அநியாயத்திற்கு இழிவுப்படுத்தியுள்ளனர். ஒரு அழகான ஆணைக் கண்டால் ஒரு பெண் கணவனை வைத்துக்கொண்டே அவனிடம் குழைவாள் என்பதும், மருமகனிடம் ஒரு மாமியார் இஷ்டத்திற்கு இறங்கி ஆடுவார் என்பது ஒவ்வாமை தரக்கூடிய சிந்தனை. படத்தை இன்ட்ரெஸ்டிங்காக நகர்த்தும் வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார் இயக்குநர். கில்மா பட ர்சிகர்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள்
2.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *