பூக்கி- விமர்சனம்

Sure shot hit மெட்டிரியலாக வந்துள்ளது பூக்கி

காதலர்கள் பிரிவதும், பிரிந்தபின் இணைவதும் உலக வழக்கம். ஆனால் காலத்துக்கு காலம் பிரிவுகளை எதிர்கொள்ளும் பாணி மாறும். இப்படத்தில் அப்படி என்னென்ன மாற்றங்களை நாயகனும் நாயகியும் சந்திக்கிறார்கள் என்பதே பூக்கியின் கதை.

தனக்கு என்ன மீட்டர் தேவையோ அந்த மீட்டரை கச்சிதமாக கேட்ச் செய்து ஹீரோ அஜய் தீஷனிடம் சொல்லி நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குநர் கணேஷ் சந்திரா. ஹீரோவும் நல்ல ஒத்துழைப்பை நல்கியுள்ளார். நாயகி தனுஷா சிறந்த நடிகைக்கான மெச்சூட் தன்மையை தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். வாழ்த்துகள். ஆதித்யா கதிர் அடிக்கும் பல பன்ச்கள் ஜென்ஸி கிட்ஸை சிரிக்க வைக்கும். விவேக் பிரசன்னா நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். பாண்டியராஜன் ஒரு எமோஷ்னல் காட்சியில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்

படத்தின் இயக்குநரான கணேஷ் சந்திரா தான் ஒளிப்பதிவும். நல்ல லைட்டிங் சென்ஸ் உள்ள ஒளிப்பதிவாளர்களில் அவரும் ஒருவர். குட்டி குட்டி காட்சிகளுக்கும் க்யூட்டான ஷாட்ஸை கம்போஸ் செய்துள்ளார். இருக்கும் பட்ஜெட்டில் அடித்து நொறுக்கும் லாவகம் அவருக்கு நன்றாகவே வரும். அதைச் செய்துள்ளார். தனக்குள் இருக்கும் எனர்ஜிடிக் இசையமைப்பாளரை இன்னமும் தொலைக்காமல் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி. பாடல்களில் இளமை துள்ளுகிறது. பேக்ரவுண்ட் ஸ்கோரில் எனர்ஜி அள்ளுகிறது. ஷார்ப்பான எடிட்டிங்கிலும் விஜய் ஆண்டனி சிக்ஸ் அடித்துள்ளார். ஒரு பெரிய ஹார்ட்டீனை உங்களுக்கு பிக்ஸ் பண்ணி வச்சிருக்கோம் சாரே!

கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் புதிய பரிதி மிகத்திறமையாக இக்கதையை அணுகியுள்ளார். காமெடியான ஒன்லைன்களும் சரி, எமோஷ்னலான வசனங்களும் சரி படத்திற்கு பெரும்பலத்தைக் கொடுத்துள்ளது. ரைட்டர் எழுதிய காட்சிகளை அவ்வளவு உயிரோட்டமாக ஸ்டேட்ஜிங் செய்துள்ளார் இயக்குநர் கணேஷ் சந்திரா. ஹீரோயின் பெயரை ஆழி என்று வைத்ததும், படத்தை கடற்கரையில் முடித்ததும் க்யூட் பொயட்டிக்!

ஒருத்தரின் அன்பிற்கு ஈடாக உலகில் பெரியது ஒன்றுமில்லை. என்ற கான்செப்ட்டாலும், எவ்வளவு பெரிய ஈகோவையும் காதல் நினைத்தால் ஒரு நொடியில் வீழ்த்தும் என்பதையும் பூக்கி கவித்துவமாகச் சொல்லியுள்ளது

டோன்ட் மிஸ் இட் மக்களே
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *