எழுத்தாளர் அஜயன் பாலா இளையராஜாவோடு கைகோர்த்துள்ள மைலாஞ்சி நம் மனதை கோர்த்துப் பிடித்ததா?
நாயகன் ஸ்ரீராம் ஒரு புகைப்பட கலைஞன். அவர் குன்னூர் வருகிறார். நாயகியைச் சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். ஆனால் நாயகிக்கி வேறோர் ஆள் மீது இஷ்டம். இது ஹீரோவுக்கு கஷ்டத்தை வழங்குகிறது. ஆனால் ஹீரோயின் நீதான் என் லவ்விற்கு ஹெல்ப் பண்ணணும் எனக்கேட்கிறார். ஹீரோவும் தன் காதலியின் இன்னொரு காதலுக்கு உதவ, இதற்கடுத்து இந்தக்கதை எங்குபோய் முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். சோ இதான் படத்தின் கதை
நல்ல நடிப்பை வழங்க வேண்டும் என ஆர்வமிருக்கிறது ஸ்ரீராமிற்கு. ஆனால் அதற்கான வாய்ப்பை அவரது கேரக்டர் வழங்கவில்லை. ஹீரோயினுக்கும் அப்படியே இந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொள்ளலாம். சிங்கம்புலி மட்டும் படத்தில் அவ்வப்பொழுது எனர்ஜி தருகிறார். மெயின் கதாப்பாத்திரங்களே மனதில் பதியாத போது எப்படி இதர கதாப்பாத்திரங்கள் பதியும்
இசைஞானி இளையராஜா என்பது டைட்டிலில் தான் இருக்கிறது. படத்தில் அது இல்லை என்பது சோகம். ஒளிப்பதிவு செழியன் என டைட்டிலில் பார்த்ததாய் ஞாபகம்
நிகழ்காலத்தில் நடக்கும் படத்திற்கு இயக்குநர் அஜயன் பாலா கடந்த காலத்திற்குச் சென்று கதையெழுதியுள்ளார். அதனால் படம் துளியும் கனெக்ட் ஆகவில்லை. கதை சொல்லல்,காட்சிமொழி, வசனங்கள், ஆக்டிங், ஸ்டேட்ஜிங் என எதிலுமே புதுமையில்லை. அதனால் மைலாஞ்சி ம்னதில் பாயவில்லை
2.25/5
-வெண்பா தமிழ்

