மதுர விசாரம்- நூல் விமர்சனம்

Sure-ஆ சொல்லலாம் ஒரு ப்யூர் சினிமாவிற்கான கன்டென்ட் நாவல்ல இருக்கு.

மதுர விசாரத்தை திரைக்கதைக்குள் நாவல், நாவலுக்குள் திரைக்கதை என வகைப்படுத்த முடியும். ஒரு திரைக்கதை ஆசிரியனின் பார்வையில் துவங்குகிற கதை. , அவனின் திரைக்கதையை முன் வைக்கையில் நாம் அதற்குள் மூழ்கிப் போகும் அற்புதம் நிகழ்கிறது..

இங்கு எவனும் பெண்ணாக இருக்க விழைவதே இல்லை. ஆனால் பெண்ணிடம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்றும், நம்மிடம் பெண் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஒரு பட்டியலையே வைத்துள்ளோம்.

இந்த நாவலில் குமாரிடம் யாமினி எப்படி நடந்து கொள்கிறாளோ, அதேபோல் என்னிடமும் யாமினி போன்ற சிலர் நடந்துகொள்ள வேண்டும் என்ற கற்பனையெல்லாம் ஒரு காலத்தில் துள்ளிக் குதித்தது. சத்தியமாக பழனி மாதிரி என்னால் இருக்கவே முடியாது..குமார் மாதிரியும் இருக்க முடியாது. ஆனால் குமார் மாதிரி நடிக்க முடியும். நடித்தும் இருக்கிறேன்.

பெண் மனதைத் துண்டு துண்டாக எடுத்து ஒவ்வொரு பக்கத்திலும் அடுக்கி இருக்கிறார் மணி எம்.கே மணி சார். எப்போதுமே எது சரி எது தவறு என்பது பெரிய விவாவத்திற்குரியது.
வாழ்வில் எல்லாமே அந்தந்த நேரத்து நியாயம் என்கிறார் ஜெயகாந்தன். உற்று உணர்ந்து பார்த்தால் இங்கு தவறு எனப்படும் சில விசயங்களை நாம் செய்யும் போது சந்தோஷமாகத் தானே செய்கிறோம். மனம் அனுமதிக்காமல் எதுவுமே செய்ய முடியாது தானே?. மனம்போல் எழுக என்கிறது ஆன்மீகம். ஒருவர் செய்பவை பிறருக்கு எத்தகைய துன்பத்தைத் தருகிறது என்பதில் தான் நீதி பாவம் என்பதை ஆராய வேண்டியுள்ளது.

வாழ்க்கையைப் பகடியாகவும் பெரும் கொண்டாட்டமாகவும் ஒரு சேரப் பார்க்கத் தெரிந்தவருக்குத் தான் இப்படியொரு எழுத்து நடை வாய்க்கும் என நம்புகிறேன். “அய்யோ இப்படி எப்படி சாத்தியம்?” என்று பலரும் பதட்டப்படும் விசயத்தை மிக அட்டகாசமாக எழுத்தாக்கி இருக்கிறார் மணி சார்.
Good one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *