பெண்களிடம் பேச கூச்சப்படும் ஆணும், ஒரு விலைமாதுவும் கடக்கும் நாள் தான் இந்த டியர் ரதி
நாயகன் சரவணா விக்ரம் ஐடி ஊழியர். பெண்களிடம் பேசவோ பழகவோ தயக்கம் கொள்ளும் இவருக்கு ஒரு உளவியல் பிரச்சனை இருக்கிறது. மருத்துவத்தில் இதை கைனோஃபோபியா என்கிறார்கள். இதைக் கண்டறியும் நாயகனின் நண்பர் நாயகி ஹஸ்லி அமானிடம் ஒரு டேட்டிங்-ஐ பிக்ஸ் செய்கிறார். ஹஸ்லி அமான் ஒரு பாலியல் தொழிலாளி. இவர்களுக்குள் நடக்கும் டேட்டிங் என்னென்ன விளைவுகளே ஏற்படுத்தியது என்பதே படத்தின் கதை
சரவணா விக்ரம் நேரடியாக தொலைக்காட்சியிலிருந்து வந்தவர் என்பதால், பெரிய திரையில் சிற்சில இடங்களில் சின்ன தடுமாற்றம் கொள்கிறார். ஆனாலும் அடுத்தடுத்த காட்சிகளில் இயல்பாக நம்மை ஈர்த்துவிடுகிறார். நாயகி ஹஸ்லி அமான் நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார். இவர்கள் இருவர் தவிர இன்னும் ஒரு சிலர் படத்தில் ஓரளவு ஒகேவாக நடித்துள்ளனர்
இசை அமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் கதையின் போக்கை உணர்ந்து இசைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் லோகேஷ் இளங்கோவன் கொடுத்த பட்ஜெட்டில் தன்னால் முடிந்தளவிற்கு நல்ல சினிமாட்டாகிராபியை செய்துள்ளார்.
சிம்பிளான ஒன்லைன்-ஆக இருந்தாலும் சற்று சர்ச்சையை ஏற்படுத்தும் கதைக்களம். இயக்குநர் பிரவீண் கே மணி கூடுமான வரை கவனமாக கையாண்டுள்ளார். ஒரே அம்சத்தில் திரும்ப திரும்ப வரும் காட்சிகளை அவாய்ட் செய்திருக்கலாம். எல்லோரும் ஏற்கும் வகையில் திரைக்கதையை ஸ்ட்ராங் செய்திருக்கலாம். சிற்சில சமரசங்களை செய்துகொள்ள முடியாததால் இந்த டியர் ரதிக்கு சியர்ஸ் சொல்ல முடியவில்லை
2.75/5
-வெண்பா தமிழ்

