ஊட்டிக்கு லூட்டி அடிக்கச் செல்லும் நான்கு இளைஞர்களும் ஒரு இளம்பெண்ணும் சேர்ந்தால் என்ன நடக்கும்? But நாம நினைக்கிறது நடக்கல. வேறொண்ணு நடக்குது
ஸ்ரீகாந்த்,ப்ளாக் பாண்டி, விஜய்டிவி பப்பு இன்னொரு இளைஞர் என நான்கு பேர் ஒரு பெண்ணை அழைத்துக்குக் கொண்டு ஊட்டிக்குச் செல்கிறார்கள். அந்தப் பெண் சிருஷ்டி டாங்கே! ஒரு பெண் நான்கு ஆண்கள் என கில்மாவிலே அல்வா கிண்டும் ரேஞ்சிற்கு படம் பயணிக்கிறது. இரு இரவு கடந்தும் அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. காரணம் சிருஷ்டி மீது ஸ்ரீகாந்த் காதல் வயப்படுகிறார். இச்சூழலில் சிருஷ்டி டாங்கே திடீரென காணாமல் போகிறார். ஸ்ரீகாந்தின் மூன்று நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார். அதன்பின் என்னென்ன ட்விஸ்ட்கள் என்பதே மீதி திரைக்கதை
கால்ஷீட் கொடுத்தாச்சு அதனால் நடித்தே ஆகவேண்டும் என்ற சலிப்போடே நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். பதட்டம் நிறைந்த காட்சிகளில் மட்டும் கவனம் ஈர்க்கிறார். சிருஷ்டி டாங்கே கிளாமரில் சூடேற்றி, நடிப்பில் ஒப்பேற்றியுள்ளார். ப்ளாக் பாண்டி விஜய்டிவி பப்பு அடிக்கும் பன்ச்கள் எல்லாம் வெறும் டின்ச்கள் தான். இன்னைக்கே தேதிக்கு ஊட்டி பேக்ராப்பில் நடக்கும் கதைக்கு போலீஸ் கேரக்டர் வேண்டுமென்றால் ஜான் விஜய் மட்டும் தான் இருக்கிறார் போல! அவரும் தனது கடமையைச் செய்துள்ளார்
கே.கோகுல் தனது ஒளிப்பதிவின் வழியாக ஊட்டி அழகை நன்றாக காட்டியுள்ளார். சிருஷ்டி டாங்கேவை காட்டும் போது மட்டும் ஓவர் டூட்டி பார்த்துள்ளார். நண்பன் சார்ந்த பாடல் ஒன்றை தரமாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தாஜ்நூர். பின்னணி இசை சில இடங்களில் கலக்கல். பல இடங்களில் சொதப்பல்
முன்பாதி படம் முழுவதும் A படம் ரேஞ்சிற்கு சீன்கள் இல்லை என்றாலும் வசனங்கள் வழியாக அதை நிவர்த்தி செய்துள்ளார் இயக்குநர் மணிபாரதி. பின்பாதி படம் போலீஸ் இன்வென்ஸ்டிகேசனிலே பயணிப்பது இன்ட்ரெஸ்டிங்! கதையின் அடிப்படையே தவறாக இருப்பதால் திரைக்கதை பெரிய சுவராஸ்யத்தைத் தரவில்லை. பெண்களை கொச்சையாக குறிப்பிடும் வசனங்களுக்கு நமது கண்டனங்கள்
அங்கங்கே சிரிப்பு, கொஞ்சம் போல பரபரப்பு என பயணிக்கும் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் இந்த தி பெட் உங்களை ஈர்க்கலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

