TTF வாசன் களமிறங்கியுள்ள IPL எப்படி இருக்கு?
இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் ஒரு இளைஞனை போலீஸ்டேசனில் வைத்து அடித்துக் கொல்கிறார். காரணம் அந்த இளைஞன் போனிலுள்ள வீடியோ. அந்த கொலைல்பழியை கார் டிரைவர் கிஷோர் மேல் போடுகிறார்கள். கிஷோரின் தங்கையை காதலிக்கும் TTF வாசன் கிஷோரை காப்பாற்ற முயற்சிக்கிறார். முயற்சியின் பலன் என்ன? என்பதே படத்தின் கதை
கதாநாயகன் TTF வாசன் தான் என்றாலும் கதையின் நாயகன் கிஷோர் தான். தன்னால் முடிந்தளவு படத்தை தனது நல்ல நடிப்பால் தாங்கியுள்ளார். அபிராமி தனது அனுபவம் மிகுந்த நடிப்பால் ஈர்க்கிறார். TTF வாசன் ஓரளவு கவனம் ஈர்த்தாலும் எமோஷ்னல் காட்சிகளில் தடுமாறவே செய்கிறார். நாயகி குஷிதா ஒகே ரகம். ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சிங்கம்புலி போன்ற நல்ல நடிகர்களும் படத்திலிருக்கிறார்கள்
அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை படத்தை பெருமளவு காப்பாற்றுகிறது. அப்போ இப்போ பாடலும், க்ளைமாக்ஸுக்கு முன் வரும் ஒரு பேத்தா சாங்கும் தரம். ஒளிப்பதிவாளர் ஒரு சேஷிங் காட்சியை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
TTF வாசன் காதல் காட்சிகளில் நம்பகத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பெரிய பெரிய விசயங்களுக்கு தகுந்த லாஜிக் ரீசன் சொல்லாமல் கடந்து போவது திரைக்கதையின் பெரிய வீக்! சிற்சில மொமெண்ட்ஸ் மட்டுமே படத்தில் கவனம் ஈர்க்கின்றன. மற்றபடி IPL எந்த Feel-ஐயும் தரவில்லை
2.5/5
-வெண்பா தமிழ்

