Devil’s Double Next Level- விமர்சனம்

ரிவ்யூவர்ஸ்-ஐ ரிவன்ச் எடுக்கும் பேய்களின் கதை இது

2K கிட்ஸ்கள் மதித்தும் எதிர்த்தும் வரும் பேமஸ் மூவி ரிவ்யூவர் சந்தானம். அவர் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் ர்த்தம் தெறிக்கும் ரேஞ்சிற்கு படங்களை விமர்சிக்கிறார். இதனால் செல்வராகவன் பேயாக வந்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ஒரு படத்திற்கு அழைத்து வந்து, அந்தப் படத்திற்குள் தள்ளிவிடுகிறார். அந்தப் படத்திற்குள் சந்தானம் & கோவிற்கு ஏற்படும் ஆபத்துகளை எல்லாம் துகள்களாக்கி சந்தானம் தன்னவர்களை எப்படி மீட்டு வந்தார் என்பது படத்தின் கதை

கவுண்டர்களால் நம் வயிற்றைப் பதம் பார்க்கும் சந்தானம், இந்தப்படத்தில் அவரது மாடுலேசனை மாற்றியுள்ளார். சில இடங்களில் அவர் பேசுவது புரியாத லெவலுக்கு உள்ளது. நாயகனான சந்தானம் காமெடியே பெரிதாக எடுபடவில்லை. மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மாறன் காமெடியில் ப்ளு சட்டை மாறன் விமர்சனத்தில் இருக்கும் சுவாரஸ்யம் கூட இல்லை. கிங்ஸ்ட்லியை விட கெளதம்மேனென் சீரியஸாக நடித்து சிரிக்க வைக்கிறார். நிழல்கள் ரவி சில இடங்களில் அசத்தியுள்ளார். இருந்தும் அவரது டாய்லெட் காமெடி படு வொர்ஸ்டு. கஸ்தூரி, யாசிகா ஆனந்த், கீதிகா திவாரி ஆகிய பெண் கேரக்டர்கள் ஒகே ரகம்

தீபக் குமார் பதி ஒரே இடத்தில் சுற்றும் கதைக்குள் தன் கேமராவை இஷ்டத்திற்கு சுற்றவிட்டுள்ளார்..சில இடங்களில் வரைகலை உதவியோடு நல்ல நல்ல ப்ரேமிங் கூட வைத்துள்ளார். OfRo இசையில் பாடல்கள் பேக்ரவுண்ட் ஸ்கோர் இரண்டுமே ட்ரெண்டில் இருக்கிறது. கோவிந்தா பாட்டுக்கு பவன் கல்யாண் கோவிந்தா போட்டது தனிப்பட்ட முறையில் நமக்கும் வருத்தம் தான்

வெறும் வசனங்களால் காமெடியை நகர்த்த முடியும். அதற்கு திரைக்கதையில் அப்படியொரு வெளி இருக்க வேண்டும். இந்தப்படத்தில் அது கொஞ்சம் இருந்தும் மிகவும் சாதாரண கவுண்டர்களால் நமத்துப் போக வைத்துவிட்டனர். காமெடிக்காக உருவாக்கப்படும் சீக்வென்ஸ் எல்லாம் நமக்கு வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தருவதால் இந்த நெக்ஸ்ட் லெவல் காமெடியில் பர்ஸ்ட் லெவலிலே தேங்கிவிட்டது. Sorry Santa.

2.5/5

  • வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *