நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதெமி வாங்கியது இந்த நூலுக்காகத் தான். “இறைவன் உறையும் பெரு மரத்துண்டுகள்” என்ற இந்த ஒருவரிக்காகவே சாகித்ய அகாதெமி கொடுக்கலாம் என ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார்.
நாஞ்சில் நாடன் தான் வாசித்தவற்றை எல்லாம் நெஞ்சில் விரித்து வைத்துள்ளார். அதனால் தான் அவர் எழுதும் எல்லாக் கதைகளிலும் பழந்தமிழ் இலக்கியச் சொற்கள் நம்மை ஆசையோடு எட்டிப்பார்க்கின்றன. அதிகாலை விடியலை ஆண்டாள் பாடலோடு பொருத்திய ஒருவரியில் நெடுநேரம் உறைந்திருந்தேன்.
சில கதைகளில் நாமும் பங்கேற்ற உணர்வு ஏற்படுகிறது. சில கதைகளில் பயணிக்க கடும் சிரமும் ஏற்படுகிறது. நாஞ்சில் நாடனே சொல்லியிருக்கிறார். கதைகள் கட்டுகரைகள் போல் உள்ளதை. கட்டுரை வடிவில் கதை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதும் நல்லதே!
எனக்கு கும்பமுனி என்ற இலக்கியர் வரும் எல்லாக் கதைகளும் மிகவும் பிடித்தது. ஒருகதையில், “திருமண உறவிலிருந்து விலக நினைக்கும் கணவன் மனைவிகள் வேறு வேறு கணவன்களையும், மனைவிகளையும் எக்ஸ்சேன்ச் பண்ணிக்கலாம்” என்ற அறிவிப்பு வருகிறது. கதையின் நாயகரான நம் இலக்கியர் கும்பமுனி அந்த அறிவிப்பை நோட் செய்துகொண்டு அங்கு செல்கிறார். அந்த நிகழ்வு நடக்குமிடங்கள், “பெரியார் திடல், அண்ணா திடல், கலைஞர் திடல். 😃😃 இந்தக் கதையில் கணவன் மனைவிக்குள் ஒவ்வாமை தரும் விசயங்கள் எவை என சிலவற்றைப் பட்டியல் போட்டுள்ளார். சிறப்பு சிறப்பு.
மேலும் தேர்தல் ஆணையத்திற்கு கும்பமுனி எழுதும் கடிதம் ஒன்று கதையாகியுள்ளது. அடடா அபாரம். முழுக்க முழுக்க பொலிட்டிகல் சட்டையர் ஆன அக்கதையில் நாஞ்சிலார் யாரையும் விட்டு வைக்காமல் மூஞ்சில் அறைந்துள்ளார்.
விருப்பம் கொள்ள வைப்பது ஒரு கலை
தேவையென எண்ண வைப்பது ஒரு கலை
சூடிய பூ சூடற்க
இரண்டாம் கலை

