குற்றப்பின்னணி உள்ள ஒருவனின் வாழ்க்கைப் பயணமே இந்த அக்யூஸ்ட்
ஹீரோ உதயா ஒரு குற்றவாளி. ஜெயிலில் இருந்து அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அழைத்துச் செல்லும் பொறுப்பு அஜ்மலுக்கு வழங்கப்படுகிறது. செல்லும் வழியில் உதயாவை கொலை செய்ய முயற்சிக்கிறது ஒரு கும்பல். அவர்கள் யார்.. உதயா காப்பாற்றப் பட்டாரா? என்பதே படத்தின் மிச்சமுள்ள கதை
கதையின் நாயகனாக உதயா காமெடி செய்கிறார், ஆக்சன் பண்ணுகிறார், அழுகிறார் எல்லாவிதமான நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். முதிர்ச்சியுள்ள அவரது ஆக்டிங் படத்திற்குப் பெரும் பலம். படத்தில் வரும் பெண் கேரக்டர்கள் யாருமே பலமாக எழுதப்படவில்லை. அதனால் நாயகிகள் யாரும் சோபிக்கவில்லை. அஜ்மல் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். யோகிபாபு ஆங்காங்கே தூவும் காமெடி முந்திரி சுவையூட்டுகிறது. ஹீரோவின் அக்காவாக வரும் தீபா எதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்
படத்தில் இசையமைப்பாளர் நிறைய ஸ்கோர் செய்ய வேண்டுமென இஷ்டத்திற்கு வாசித்துத் தள்ளியிருக்கிறார். படமெங்கும் அது அநியாயத்திற்கு சோர்வடையச் செய்கிறது. சற்று குறைத்திருக்கலாம் ஒளிப்பதிவாளர் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். என்றாலும் தனது எல்லைக்குள் நின்று விளையாடியுள்ளார்
கதையாக ஒரு கேரக்டரின் வாழ்வை வடிவமைத்த இயக்குநர் திரைக்கதையை சிக்கனமாகவே கையாண்டுள்ளார். எல்லா எமோஷ்னலும் இன்னும் சரிவர கூடி வந்திருக்கலாம். படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாகச் செல்கிறது என்பது ப்ளஸ். தொடர்பற்ற இடைச்செருகல் படத்தில் இருந்தாலும், ஒரு சாமானியனின் சின்னச் சின்ன கெட்ட செயல் அவனை எப்படியான இடர்க்ளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை நச் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் பிரபு சீனிவாஸ்.
அக்யூஸ்ட்- ஸ்ட்ராங் ஆன கதையால் தப்பித்து விடுகிறார்
3/5
-வெண்பா தமிழ்

