பெண்களை குறி வைக்கும் வஞ்சகர்களை கொளுத்துவதே இந்த போகி
ஹீரோ நபி நந்திக்கு தன் தங்கை ஸ்வாசிகா தான் உலகம். அந்த தங்கைக்கு வில்லன் கும்பலால் ஒரு கொடுமை நடக்கிறது. அக்கொடுமைக்கு ஹீரோ பழிவாங்கச் செல்கிறார். மலைக் கிராமத்தில் வாழ்ந்து தமிழகத்திலே 12-ஆம் வகுப்பில் நம்பர் ஒன்-ஆக வந்த ஸ்வாசிகாவிற்கு நடந்த கொடுமை என்ன.. அந்தக் கொடுமைக்கு ஹீரோ எப்படி பழி தீர்க்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை
நபி நந்தி இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். காதல் காட்சிகளை விட சில செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ஸ்வாசிகா இப்படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார். வழக்கம் போல சிறப்பாகவும் நடித்துள்ளார். மேலும் ஷரத், சங்கிலி முருகன், எம்.எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், பூனம் கவுர், வேல.ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். அனைவருமே ஒகே ரகம்
படத்தில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. சினேகன் வரிகளில் மரியா மனோகர் இசையில் பாடல்கள் நல்ல பாசிட்டிவ் வைப் கொடுக்கிறது. பின்னணி இசை கூட பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் ராஜா C சேகர் மலை கிராமத்து அழகை துல்லியமாக காட்டியுள்ளார். போஸ்ட் புரோடக்ஷன் சார்ந்த கலர் கரெக்சன் வேலைகளை இன்னும் ஆழமாக கவனித்திருக்கலாம்
படம் பேச வரும் கன்டென்ட் நிச்சயமாக பாராட்ட வேண்டிய ஒன்று. கதையாக ஈர்க்கும் படம் திரைக்கதையாகவும் ஈர்த்திருக்கலாம். இயக்குநர் விஜயசேகரன் S மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.பாவம் கிடைத்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பாக முயற்சித்துள்ளார். நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்ற வகையில் பெருந்தீயாக பற்றா.விட்டாலும் சிறு நெருப்பாக வெளிச்சம் தரவே செய்கிறது இந்த போகி
3/5
-வெண்பா தமிழ்

