29- விமர்சனம்

ஒரு ஆண்மகனின் வாழ்வில் 29-ஆவது வயது எத்தகைய ரோல்ப்ளே செய்யும் என்பதைச் சொல்கிறது படம்

ஹீரோ விது சேலத்திலிருந்து தனக்கான அடையாளம் என்ன என்பதைத்தேடி சென்னை வருகிறார். விவசாயப் பின்புலத்தைச் சேர்ந்த அவர் அக்ரிகல்ச்சர் படித்தவர். சென்னையில் கிடைத்த வேலையைப் பார்த்துவருகிறார். தான் எதை நோக்கிச் செல்வது என்ற குழப்பத்தோடு திரியும் அவர் வாழ்வில் ப்ரீத்தி அஸ்ராணி வருகிறார். இவர்களின் காதல் பயணம் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை எங்கு கொண்டு செல்கிறது என்பதே படத்தின் கதை

கதையின் நாயகனாக விது நல்ல தேர்வு! தன்னால் முடிந்த மட்டும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். நாயகி ப்ரீத்தி அஸ்ராணி படத்தின் பெருந்தூண். அட்டகாசமான நடிப்பால் நம்மை உருக்குகிறார். அழகு ரியாக்சன்ஸ், நடனம் என பக்கா மாஸ் ஹீரோயின் மெட்டிரியலாக உருவாகியுள்ளார். விதுவின் நண்பராக வரும் அவினாஸ் அருமையான நடிப்பால் படத்தை ஆங்காங்கே கலகலப்பாக மாற்றுகிறார். மாஸ்டர் மகேந்திரன் நெகட்டிவ் ரோல் செய்துள்ளார். ஒரு காட்சியில் அசத்தலாக நடித்து ஸ்கோர் வாங்குகிறார்

ஷான்ரோல்டன் படத்தை தன் சோல்டரில் வைத்து அசத்தியிருக்கிறார். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே சூப்பர். மாதேஸ் மாணிக்கம் ஒளிப்பதிவை மிகத்தரமாக கையாண்டுள்ளார். எதார்த்தம் மீறாத அவரது ஷாட் கம்போஸிங் அட்டகாசம்

இயக்குநர் ரத்னகுமார் தனது வசனங்கள் மூலம் பல காட்சிகளை கவித்துமாக மாற்றியுள்ளார். 29 வயதை எட்டியும் இலக்கு என்னவென்று அறியாத இளைஞனின் உளவியலை எழுத்தின் வழி அழகாக கடத்தியுள்ளார். காட்சிகளின் நீளத்தை இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். சில க்ரிஞ்ச் ஐட்டங்களையும் நீக்கியிருக்கலாம். முன்பாதியில் வரும் காதல் காட்சிகள் சற்று போரடித்தாலும் பின்பாதியில் வரும் பாசிட்டிவான எமோஷ்னல் காட்சிகள் படத்தை காப்பாற்றுகிறது

“வாழ்வில் இலக்கு என்பது தேடலாக இருந்தாலே போதும்” என்பதை நச் என்று சொன்னதற்காகவே 29 படத்தை நாம் கொண்டாடலாம்
3.25/5
-வெண்பா தமிழ்
#29movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *