யெல்லோ- விமர்சனம்

வானில் வண்ணங்கள் மாறுவதைப் போல வாழ்விலும் எல்லாம் மாறக்கூடியது என்பதைச் சொல்ல முயற்சித்துள்ளது யெல்லோ

அம்மா, தங்கை, மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அப்பா ஆகியரோடு வாழும் நாயகி பூர்ணிமா ரவிக்கு ஒரு காதல் தோல்வி நேர்கிறது. அந்தத் தோல்வி அவரை சராசரி வாழ்வில் இயங்கும் திறனை சிதைக்கிறது. தான் சின்ன வயதில் பார்த்துப் பழகிய உறவுகளை சந்தித்து தன்னை ரீ பிரஷ் செய்வதற்காக ஒரு பயணம் செல்கிறார். அந்தப் பயணத்தில் ஒரு உறவான நமிதா கிருஷ்ணமூர்த்தியை மீட் செய்கிறார். அவர் சில நல்ல தருணங்களை பூர்ணிமாவிற்கு வழங்கி இன்னொரு இடத்திற்கு அனுப்பி வைக்கிறார். அந்தப் பயணத்தில் நாயகன் வைபவ் முருகேசனை சந்திக்கிறார். இருவரும் நட்பாகி செல்கிறார்கள். அவர்களின் இணை பயணத்தில் நடக்கும் எமோஷ்னல், ஜாலி சம்பவங்கள் தான் படத்தின் கதை

நிச்சயமாக இது நாயகியை முன்னிறுத்தியுள்ள படம் என்பதால் முதலில் பூர்ணிமா ரவியின் நடிப்பைப் பற்றி சொல்லவேண்டும். வீக்-ஆக இருக்கும் மனநிலையை முகத்தில் வெளிப்படுத்தும் கலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். கதையை முழுதாக உள்வாங்கி எல்லாக் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார் பூர்ணிமா ரவி. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக கவனம் குவிப்பார். நாயகன் வைபவ் முருகேசன். கேரக்டரிலே ஒரு பாசிட்டிவ் வைப் இருப்பதை உணர்ந்து படமெங்கும் நேர்மறை வைப்லே இருக்கிறார். அது நமக்கு ஈசியாக கனெக்ட் ஆகிறது. வாழ்த்துகள் சகோ. ஏனைய கேரக்டர்களில், நமிதா கிருஷ்ணமூர்த்தி டெல்லி கணேஷ், பிரபு சாலமன் உள்பட அனைவருமே கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் படத்தின் இன்னொரு ஹீரோ. ஆகச்சிறப்பான ப்ரேமிங்கால் நம்மை அசரடித்துள்ளார். ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவைப்படும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக இசைத்துள்ளது. சிப்பி கிரிஷின் இசையில் எல்லாப் பாடல்களும் ஒகே ரகம். சில பாடல்கள் டபுள் ஒகே ரகம்

“உன்னை வீக் ஆக்குற பவரை இன்னொருத்தருக்கு கொடுக்காத”

“ஒரு டைம்ல வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா நம்ம வாழ்க்கையில நாமளே இருக்க மாட்டோம்.. So find your self” போன்ற கச்சிதமான வசனங்களால் ஒரு ரைட்டராக ஈர்த்துவிடுகிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். பூர்ணிமாவின் பயணத்தின் தேவையை இன்னும் ஸ்ட்ராங்காக திரைக்கதை வழிநின்று உணர்த்தியிருக்கலாம். சில காட்சிகள் கூறியதையே கூறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டன.

வாழ்வு என்பது தேங்கி நிற்பதல்ல.. கடந்து செல்வது. நாமும் நின்றுவிடக்கூடாது. எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும். அப்படிச் செல்பவர்களால் மட்டுமே தன்னை வெல்ல முடியும். தன்னை வென்றால் தான் வாழ்வை வெல்ல முடியும் என்ற அழகான விசயத்தைச் சொன்னதற்காக குறைகள் மறந்து யெல்லோவிற்கு ஹெல்லோ சொல்லலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *