மலைவாழ் மக்களின் வாழ்வைச் சொல்லியுள்ள ஒரு சிறந்தபடம் இந்த வெள்ள குதிர
நாயகன் ஹரிஷ் ஒரி ஒரு சூழல் காரணமாக தான் பிறந்த மலைக்கிராமத்திற்குச் செல்கிறார். திருவண்ணாமலை அருகேயுள்ள இக்கிராமத்தில் தன் வாழ்வை செழுமையாக ஓட்டுவதற்காக ஒரு மூலிகை ரசம் தயாரிக்கிறார். வில்லன் அதைத் தவறான பாதைக்குக் கொண்டுசெல்கிறார். நாயகனும் அதற்கு உடன்படுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதாக கதை விரிகிறது
கதையின் நாயகன் ஹரிஷ் ஒரி படத்தின் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். மிகச்சிறப்பாக தன் பணியைச் செய்துள்ளார். நாயகி அபிராமி போஸ் ஒரு மலைவாழ் பெண்ணை நம் கண்முன் நிறுத்தி ஆச்சர்யப்படுத்துகிறார். நிச்சயமாக நல்ல தேர்வு அவர். மேலும் வில்லன் உள்பட பலரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்
ஒளிப்பதிவாளர் ராம்தேவ் தனது கேமராவால் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பேரழகு காட்சிகளை அள்ளி வந்துள்ளார். இசை அமைப்பாளர் பரத் ஆசீவகன் அசத்தியுள்ளார். அசாத்தியமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருப்பது அவரின் பின்னணி இசை தான். வாழ்த்துகள் சகோ
ஒரு கிராமத்திற்கு எது கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தானே நல்லரசு? ஆனால் இன்றைய நிலை வேறாகவல்லவா உள்ளது. தனக்கு தனிப்பட்ட லாபமில்லை என்றால், அரசியல் வாதிகள் எந்த நல்லவைகளையும் செய்வதில்லை. இதை அச்சுப் பிறழாமல் நேர்மையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார். படத்தின் எடிட்டரும் அவரே என்பதால் கூடுதல் பொறுப்போடு உழைத்துள்ளார்
நிச்சயமாக தியேட்டரில் நாம் கொண்டாட வேண்டிய படமிது
வெள்ள குதிர- வெற்றிப் பாய்ச்சல்
3.5/5
-வெண்பா தமிழ்

