அண்ணர் அராத்து அராஜகம் 1000 னு ஒரு புக் எழுதிருந்தாப்டி. அதில் ஒரு அராஜகம் இப்படி வரும், “பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்தேன். குருஜி சொன்னது நினைவுக்கு வந்தது..” அத்தனைக்கும் ஆசைப்படு” படிச்சிட்டு இந்த மனுசன் ரொம்ப குறும்பான ஆளுன்னு நினைச்சுக்கிட்டேன்
காதல் பத்தி தலைவன் எழுதப்போறார்னதும் எதிர்பார்ப்பு ஏகமா இருந்துச்சு. Full satisfied
முழுக்க முழுக்க உரையாடல் வழி கதை நகர்வதால் 35 நிமிசத்துக்குள்ள 96 பக்கத்தையும் ஈசியா முடிச்சிடலாம்..
அஸ்வத், வதனா,/ ஒளி இன்பா, / ரூபன், ஹர்ஷினி,/ சோகமான நரேன் இவன் சிங்கிளன் (Not சிங்களன்) சிந்து இவள் கமிட்டட் Girl..but அவளுக்கு அஸ்வத் கூட கேரிங்கான சம்பவம் நடந்ததும் உண்டு.. இது வதனாவுக்கும் தெரியும்.. இவர்களுக்குள் நடக்குற லவ் பற்றிய உரையாடல் தான் கதையே…
நரேனோட காதல் தோல்வியை முன் வைத்து அஸ்வத் கேரக்டர் மூலமா உரையாடல் துவங்குது..
“அன்பு என்பதே மூட நம்பிக்கை” அப்படின்னு ஒரு வரி படிச்சிருக்கேன். தேவைகளுக்காக ஏற்படுத்திக்கிற கமிட்மெண்ட்ஸை அன்பு அது இதுன்னு உருட்டுறதுல ஒண்ணுமே இல்ல. Sex தான் மொத்த ஆண்/பெண் ஈர்ப்புகளை தீர்மானம் பண்ணுது. மனசுக்குள்ள ஒழிச்சு வச்சிக்கிற, வெளியே யாருக்கும் தெரியாதுன்னு தெம்பா நினைச்சுக்கிற எல்லா விசங்களையும் ஓப்பனா வெளில சொன்னோம்னா நம்மோட இன்னொரு வெர்சன் அப்பட்டமா தெரியும். அதை தெரிய வைக்கிற முயற்சியா இந்ந குறுநாவலை அணுகிருக்கார் அண்ணர் அராத்து.
காதல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். காமத்தின் நீட்சியே காதல்னு சொல்வார் சிலர். காதல் காமம் கடந்தது என்பார் சிலர்.
சிலரோ அய்யோ அது பெரும்புனிதம் என்பார். முழுக்க முழுக்க உடல் பகிர்வை மட்டுமே ஏந்தி நிற்கும் அம்சம் தான் காதல்..காதலுக்கு அடிப்படை அது மட்டுமே என்று கொடி பிடிப்போரும் உண்டு.
இவற்றில் எந்தெந்த பாயிண்ட் யாருக்கு ஒத்துப்போகுதோ அதை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் இந்த நூல் அதைத் தாண்டிய ஒரு விசயத்தை பேசுது. அதைச் சொன்னா சிலர் என்னை ப்ளாக் பண்ணக்கூடும்..
தனக்குள் ஒழித்து வைத்துள்ள மொத்தத்தையும் கொட்டி விட்டு இருவரும் ஒரு புரிதலுக்குள் வந்து இணைவது தான் ஓரளவு நிம்மதியா வாழ ஏதுவா இருக்கும். ஆனால் அந்த விசயத்தில் அராத்து ஒரு சம்மட்டியடி கொடுக்கிறார்
அதாகப்பட்டது, இந்த உலகத்தில் அப்படி எல்லா விசயத்தையும் மொத்தமா சொல்ல முடியாது. சொல்லச்சொல்லி தன் இணையை டார்ச்சர் பண்றதோ போர்ஸ் பண்றதோ சேடிஷ்னெஸ் என்கிறார் ரைட்டர். உன் பாஸ்ட் எல்லாத்தையும் சொல்லு எனும் போது ஒரு குற்றவுணர்ச்சி வந்து நிற்கும். அப்படியான குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துற கமிட்மெண்ட்ஸ் நான்சென்ஸ்னெஸ் தான் என்பது அஸ்வத் கேரக்டரின் தெளிபு. இப்படி நாவலில் உள்ள ஒவ்வொரு கேரக்டரும் காதல் பற்றிய ஒரு புரிதலோடு காதலிக்கிறார்கள். காதல் தோல்வி தந்த துக்கத்தில் வந்த நரேனுக்கு என்ன தெளிவு கிடைத்தது என்பதை தெளிவாகச் சொல்லவில்லை..அல்லது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.. காதலே அப்படித்தானே😍
காதல் ஒருமுறை தான் ஒருவர் மீதுதான் வரணும் என்பது நம் ஆசையாக கனவாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை தான் வரும் என்பதற்கு துளிகூட உத்திரவாதம் இல்லை.. மனதின் டிசைன் அப்படி. ஆனால் நம் நாக்குக்கு மனசு இப்படியான விசயத்தை எடிட் பண்ணித் தான் சொல்லும்.. அதைத்தான் ஊரும் விரும்பும்
Finally பல பர்னிச்சர்களை உடைத்து நொறுக்கி நிஜம் பேசியிருக்கும் “உண்மையான காதல்” Good
Congrats Araathu R ண்ணே

