ட்ரெண்டிங்- விமர்சனம்

இணையவழி வருமானத்திற்கு அடிக்ட் ஆகும் இளம் தம்பதிகளின் கதை

கணவன் கலையரசன் மனைவி ப்ரியாலயா இருவரும் சிறந்த கணவன் மனைவி என உலகத்திடம் நிரூபித்து வீடியோக்களாகப் போடுகிறார்கள். அதை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து அவர்களுக்கு வருமானம் கொட்டுகிறது. அந்த வருமானத்தில் வீடு கார் என வசதியாக வாழ்கிறார்கள். திடீரென அவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. பின் ஒரு ஆன்லைன் கேம் ஷோவில் கலந்து கொள்கிறார்கள். அந்த கேம் இவர்கள் வாழ்வில் விளையாடுகிறது. அந்த விளையாட்டின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை

கலையரசன் வழக்கம் போல நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். சிலநேரம் அவரது கேரக்டர் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ரைட்ட்டிங்கில் உள்ள இந்தப் பலவீனத்தால் கலையரசனோடு நாம் ஒன்ற முடியவில்லை. நாயகி ப்ரியாலயா ஆகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயமாக நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்தால் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார். ப்ரேம் குமார் எதிர்பாராத கேரக்டரில் வந்து அசத்தியுள்ளார்.

இயக்குநர் சிவராஜ் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என சில விபரீத காட்சிகளை எல்லாம் படத்தில் வைத்துள்ளார். ஆனாலும் இணைய வழி வருமானத்தில் சுகம் கண்டுவிட்டால் அது நம்மை எந்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்ற கருத்து வரவேற்க வேண்டிய ஒன்று. நல்ல கேம் கதையில் கிடைத்தும், திரைக்கதையில் விளையாடத் தவறிவிட்டார் சிவராஜ்
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *