தனது பொக்கிசத்தை விற்ற துறவி- நூல் விமர்சனம்

“வாழ்க்கை என்பது இறைச்சித் துண்டைப் போன்றது. உங்களது நேரத்தை வென்று ஆள வேண்டுமானால் இறைச்சியில் இருந்து கொழுப்பைப் பிரித்தெடுக்க வேண்டும்”

“நேரத்தை சரியாக நிர்வகித்தால் வாழ்க்கையைச் சரியாக நிர்வகிக்க முடியும்” இப்படி நேரத்தைப் பற்றிப் பாடமெடுத்த கடைசி 40 பக்கம் ரொம்ப பிடித்திருந்தது. அதற்கு முன்னாடி உள்ள எல்லாப் பக்கங்களும் எல்லா சுய முன்னேற்ற நூல்களில் உள்ள அம்சத்தோடு தான் இருந்தன.

வண்ணாரப்பேட்டை வாழ்க்கையின் போது மதிப்புக்குரிய உமாபதி சார் ஆதரவால் அப்படியான எனர்ஜிடிக் நூல்களை வாசித்த அனுபவம் இருந்ததால் இது மீள் வாசிப்பு போலவே இருந்தது.

எண்ணும் எண்ணங்களும் எண்ணங்களில் இருந்து புறப்படும் வார்த்தைகளும், வார்த்தைகள் வழிநடத்தும் செயல்களும் தான் நமது பாதையைத் தீர்மானிக்கிறது. எதிர்மறை சிந்தனைக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கவல்லது மனம். அதை நேர்மறைக்குப் பழக்கப்படுத்துவது ஒரு கலை. அதைச் செய்துவிட்டால் மனம் நம்மைச் சரியாக வழி நடத்தும்.

கொரோனா காலத்தில் பல கொந்தளிப்பு மனதில் இருந்தாலும் இந்தப்பொக்கிஷத்தை விற்ற துறவி, “வாழ்க்கை அழகானதுடா மடையா” என்கிறார்..நூலை சிஸ்டர் அன்னலெட்சுமி மூலமாக கையில் கிடைக்க வைத்த இறைவனுக்கு நன்றி..

அடுத்து வாசிப்பில் இருப்பது இலக்கியம்😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *