சட்டென்று மாறுது வானிலை- விமர்சனம்

தீயசக்திகளை களையெடுக்கும் ஒற்றை ஹீரோவின் காதல் கதை இது

ஹீரோ ஜெய் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு மீனாட்சி கோவிந்தராஜன் மீது காதல் வருகிறது. (கண்டதும் காதல்தான்) மினிஸ்டரின் மகளான மீனாட்சியும் ஜெய்க்கு ஓகே சொல்லி திருமணமும் செய்துகொள்கிறார். கட் செய்தால் வில்லன் நடத்தும் ஓட்டலுக்கு ஹனீமூன் செல்கிறார்கள் ஜெய்யும், மீனாட்சியும். வில்லனின் பிரதான வேலையே தன் ஓட்டலில் தங்கும் ஜோடிகளின் அந்தரங்கத்தை படம்பிடிப்பது தான். ஹீரோவுக்கு இது தெரியவருகிறது. அதன்பின் அவர் எடுக்கும் ஸ்மார்ட் மூவ் என்ன என்பதே படத்தின் கதை

ஹீரோ ஜெய் ஈசியாக எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் எமோஷ்னல் ஏரியாவில் நன்றாக நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். யோகிபாபு காமெடி சில இடங்களில் நன்றாகவே வொர்க் ஆகியுள்ளது. சொப்னா என்ற கேரக்டரில் நடித்துள்ள காவ்யாவும் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஆதித்யா கதிர் கிடைக்கும் கேப்களில் அட்டன்சன் போடுகிறார். வில்லன் கேரக்டருக்கான ரைட்டிங் சற்று வீக்காக இருந்தாலும் அவர் நடிப்பு பேக்-ஆக இல்லை.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் பெரிதாக வொர்க் ஆகவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் சிற்சில காட்சிகளில் மேஜிக் நிகழ்ந்துள்ளது

இயக்குநர் பாபுவிஜய் ஏ.ஆர் முருகதாஸ் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் ஒரு பக்கா கமர்சியல் படமாக இருந்தாலும் படத்தில் மெசேஜ் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறார். ஓட்டல்களில் தனிமனித அந்தரங்கங்களை படம்பிடிக்கும் கொடூரம், அதை கோடிகள் கொடுத்து போஸ்ட் செய்ய தயாராயுள்ள பல வெப்சைட்கள் என ஒரு கொடிய உலகத்தை கண்முன் காட்டியுள்ளார் இயக்குநர். கதையில் ஒரு சீரான போக்கு இருந்தாலும், திரைக்கதை அங்குமிங்குமாக தடுமாறவே செய்கிறது. “அந்தரங்கம் வெளியானால் தற்கொலை” எனச்செல்லும் கேரக்டர்களையும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். எதையும் எதிர்கொள்ளும் கேரக்டர்கள் தானே சமூகத்துக்குத் தேவை. சின்னச்சின்ன குறைபாடுகள் இருந்தாலும் ஓரளவு என்கேஜ் செய்கிறது இந்த வானிலை
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *